முசலி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம்
முசலி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று பிரதேச சபை கட்டிடத்தில் பிரதேச சபை தலைவர் தேமசமான்ய எஹியான் தலைமையில் கூடியது.இக் கூட்டத்தின் போது சபை தலைவர் எஹியான் விசேட பிரேரனையொன்றை சமர்பித்து அதனை சபை உறுப்பினர்களின் ஏக அங்கீகாரத்தை பெற்றார்.இந்த பிரேரணையினை சபையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்புஇஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்இஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எக மனதாக ஏற்றுக் காண்டனர்
இங்கு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஜனாதிபதிஇபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷஇவன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன்இவடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறிஇமுசலி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும்இபாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த சபை அமர்வின் போது முன் வைக்கப்பட்ட பிரேரணை குறித்து ஊடகங்களுக்கு சபை தலைவர் கருத்துரைக்கும் போது -
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அநியாயத்தை தோற்கடிக்க அமைச்சர் றிசாத் பதியுதீனால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இந்த நாட்டில் உள்ள ஏனைய முஸ்லிம் அரசியல் தலைமைகள்இமற்றும் துறை சார்நதவர்கள்இபுத்தி ஜீவீகள் அனைவரும் ஒன்று பட்டு உதவி புரிய முன்வர வேண்டும் என்று மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபையின் தலைவர் தேசமான்ய எஹியான் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இகளமிறங்கி அதனை தடுக்கும் அனைத்து வேலைகளையும் செய்துவருவது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்திவருகின்றது.
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இந்த இனச் சுத்திகரிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றது.அன்று முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு பக்கபலமாக விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் அணி என்பது பகிரங்கமான உண்மையாகும்.அதனை அவர்களால் ஒரு போதும் தட்டிக்கழிக்க முடியாது.
மறியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள்இமுஸ்லிம்கள் குறித்து ஆக்க பூர்வமானஇஅனுதாபமான கருத்துக்களையும்இஉரைகளையும் ஆற்றியும் வெளியிட்டும்வருவதுஇபாராட்டுக்குரியதொன்றாக இருந்த போதும்இஅதே அணியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களை அவமதிக்கும் செயற்பாடுகளையும்இமக்களது உரிமைகளை பெற்றுக் கொள்ளவிடாது தடையேற்படுத்தும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றமை ஒன்றுக்கொன்று மரண்பாடானதாகவே காணப்படுகின்றது.
இர்ஷாத் றஹ்மத்துல்லா -
முசலி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம்
Reviewed by NEWMANNAR
on
April 19, 2013
Rating:
No comments:
Post a Comment