அண்மைய செய்திகள்

recent
-

எய்தவன் தன்னோடிருக்க அம்பை நொந்து என்ன பயன்-முபாறக் அப்துல் மஜீத்

''எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அகில இலங்கை முஸ்லிம். காங்கிரஸ் முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது'' என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அர சின் பின்புலத்தில் உருவாக்கப் பட்டதே பொது பலசேனா.

அதனை நிரூபிக்கும் வகையில் உலமா சபைக்கும் பொது பல சேனாவுக்குமிடையில் எங்கு வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன? எவரது அழுத்தத்தினால் உலமா சபை ஹலாலை கைவிட முன் வந்தது என்ப தெல்லாம் அனைவரும் அறிந்த இரகசியம்.

இவை அத்தனையும் தமக்குத் தெரியாது என்பது போல் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசை விடுத்து பொது பல சேனாவை மட்டும் கண்டிப்பதன் மூலம் இதன் பின்னணியில் அரசு இல்லை என முஸ்லிம்களுக்கும் காட்ட முன்வருகிறது.

அ. இ. மு.காவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவருமே இது வரை இனவாத செயற்பாடு களுக்கானஅரசின் ஒத்துழைப்பு பற்றி பேசவில்லை.

இந்த நிலையில் அதன் செயலாளர் பொது பல சேனாவை மட்டும் கண் டித்து அறிக்கை விடுவதன் மூலம் அரசைக் காப்பாற்ற முனைகிறார். நடந்த விடயத்தை தெரிந்து கொண்டே உண்மையை மறைத்து முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறார்கள் போலத் தெரிகிறது.

பொது பல சேனா மீதான முஸ்லிம் எதிர்ப்புக்களை நலிவு படுத்த அரச ஆதரவு இல்லா திருந்தால் அவற்றை முஸ்லிம்கள் மிக இலகுவாக முறியடித் திருப்பார்கள். அப்பாவி முஸ்லிம் சமூகத்தை அ.இ.மு. காங்கிரஸ் இனியும் ஏமாற்ற முனைய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
எய்தவன் தன்னோடிருக்க அம்பை நொந்து என்ன பயன்-முபாறக் அப்துல் மஜீத் Reviewed by NEWMANNAR on April 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.