மன்-புதுக்குடியிருப்பு ம.வி பாடசாலை மாணவர்கள்,பெற்றோர் ஆர்ப்பாட்டம்-அதிபரை இடமாற்றவும் கோரிக்கை.
பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பாக கடந்த ஒரு வருட காலமாக மன்னார் வலயக்கல்வி திணைக்களத்தின் அதிகாரிகளை பெற்றோர் சந்தித்து வந்த நிலையில் மன்னார் கல்வித்திணைக்களம் மன்னார் புதுக்குடியிருப்பு ம.வி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
-இந்த நிலையில் பாடசாலையில் கடமையாற்றி வந்த 5 ஆசிரியர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன் மன்னார் வலயக்கல்வித்திணைக்களம் இடமாற்றம் செய்துள்ளது;.
எனினும் அவ்விடத்திற்கு இது வரை எந்த ஆசிரியர்களும் நியமிக்கவில்லை.இதனால் மாணவர்கள் தொடர்ந்தும் பாதீப்படைந்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி தற்போதுள்ள அதிபர் உடனடியாக அப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு தகுதியான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் மன்னார் புதுக்குடியிருப்பு ம.வி பாடசாலைக்கு முன் குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
சுமார் 9 மணிவரை இடம் பெற்றது.இதன் போது பாடசாலை மாணவர்களும்,பல நூற்றுக்கணக்காண பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரி,மன்னார் வலயக்கல்வித்திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பிரதேச சபை உறுப்பினர் முஹமட் ஹாமீல் ஆகியோர் வருகை தந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் வலயக்கல்வித்திணைக்கள அதிகாரிகள் உடனடியாக குறித்த பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தமையினைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
மன்-புதுக்குடியிருப்பு ம.வி பாடசாலை மாணவர்கள்,பெற்றோர் ஆர்ப்பாட்டம்-அதிபரை இடமாற்றவும் கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
April 27, 2013
Rating:
No comments:
Post a Comment