அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா .சம்பந்தன் அவர்களுக்கு வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்திற்கான அமைப்பின் தலைவரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் அனுப்பியுள்ள கடிதம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா .சம்பந்தன் அவர்களுக்கு வவுனியா மாவட்ட  இன நல்லுறவு ஒன்றியத்திற்கான அமைப்பின் தலைவரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் பாரி   அனுப்பியுள்ள கடிதத்தின் முழு வடிவத்தினையும் இங்கு தருகின்றோம்.


தமிழ் இனவாத சக்திகள் எதை கூறினாலும் வடக்கு முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு உரிமையிருக்கின்றது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே!

தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை கொண்டிடாடிகொண்டிருக்கும் இந்த வேளையில் வடக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை கடை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்து வவுனியா மாவட்ட மீள்குடியேறிய அமைப்பு கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமாகிய கௌரவ இரா.சம்பந்தன் ஆகிய தங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கடிதத்தை ஊடக வாயிலாக பார்க்க கிடைத்தது அதற்கான தெளிவான பதிலை வழங்க வேண்டியது எனது பொறுப்பு என்பதால் இந்த விளக்கத்தை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் என்பவர்கள் வந்தேறு குடிகளல்ல என்பதையும் தமிழர்கள் பேசும் தமிழ் மொழியினை தமது தாய் மொழியாகவும் கொண்டுள்ள மக்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாத வரை ஒரு போதும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாது என்பது எமது அமைப்பின் வெளிப்படையான உண்மையாகும் என்பதை முதலில் தங்களின் கவனத்தை ஈர்க்க செய்வது முக்கியமானதொன்று என கருதுகின்றேன்.

கடந்த 30 வருடங்கள் நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத சூழல் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய இடைவெளியின் இழப்புக்களை ஒரு சில வரிகளினால் விளக்கப்படுத்திவிட முடியாது.பல தசாப்தங்கள் பழமையும் பெருமையும் வரலாற்று பதிவுகளில் பொறிக்கப்பட்ட சமூகம் இலங்கை முஸ்லிம்கள் என்பதை கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான நீங்கள் நன்கு அறிந்திருந்ததன் விளைவாகத்தான் அன்று பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் சக்திகளை கண்டித்து ஆற்றிய உரையினை பார்க்க முடிகின்றது.

அது சிங்கள பொதுபல சேனாவுக்கு மற்றும் ஆற்றிய உரையாக அல்லது அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு மற்றுமொரு பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் நபர்களுக்கும் என்பதை வவுனியா மாவட் மீள்குடியேமர்ந்தோர் அமைப்பு தங்களுக்கு எழுதியுள்ள கடித்த்தில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

எவர் அநியாயம் செய்தாலும் அது அநியாயமே என்பதை கோடிட்டு காட்டியுள்ள உங்களை போன்ற மூத்த அரசியல் வாதிகள் இருக்கின்றபடியால் தான் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு பழுதடையாமல் இருக்கின்றது. இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் சாரி சாரியாக மெனிக் பார்ம் மற்றும் வவுனியா அகதி முகாம்களுக்கு வருகைத் தந்த போது அவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு வவுனியா மாவட்ட முஸ்லிம்களும்இஅன்று மீள்குடியேற்ற இஅனர்த்த சேவைகள் அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் அவர்களும் ஆற்றிய பங்களிப்பினை சில தமிழ் சகோதரர்கள் மறந்து பேசினாலும்இநீங்கள் ஒரு போதும் மறந்திருக்க மாட்டீர்கள்.

தமிழ் மக்கள் அகதிகளாக வந்த போது வவுனியா மாவட்ட பள்ளி வாசல் சம்மேளனம் இரவு பகலாக இம்மக்களுக்கு தேவாயன உதவிகளை நல்கியதை நினைவுபடுத்துவது செய்தவற்றை சொல்லிக் காட்டும் ஒன்றாக நீங்கள் நினைத்துவிட வேண்டாம்.ஆனால் அதை இப்போது ஞாபகப்படுத்துவது பொருத்தமென நிணைக்கின்றேன்.வவுனியா மாவட் மீள்குடியர்ந்தோர் அமைப்பு என்பது எப்போது உருவாக்கப்பட்டது அதனது பின்னணியில் இருப்பவர்கள் யாரென்பதை சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த மாவட்டத்தில் வாழும் மக்களின் உறவைவிரும்பாத சில அரசியல் சக்திகள்இஇவ்வாறான அமைப்புக்கனைள உருவாக்கியுள்ளதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள் இனி விடயத்திற்கு வருகின்றேன்.இவடக்கில் விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இற்றைக்கு 23 வருடங்கள் ஆகின்றன.இந்த காலம் முஸ்லிம்களது வாழ்வில் ஒரு கறுப்பு நாளாகவே பார்க்கப்படுகின்றது.

அன்று முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்கள் தமிழ் ஆயுத அமைப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டதுடன் முஸ்லிம்களது சொத்துக்களும் அபகரிக்கப்பட்டது.வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 24 மணித்தியாலம்இஅதே போல் கையில் சொப்பின் உரையினை மட்டுமே கொண்டு செல்ல அன்று விடுதலைப் புலிகள் அனுமதியளித்தனர்.

இவ்வாறு துன்பியல் வாழ்க்கையினை சந்தித்த முஸ்லிம்கள்.தாம் இடம் பெயர்ந்து வாழ்ந்த பிரதேசங்களில் எதிர் கொண்ட கெடுபிடிகள்இபிரச்சினைகள்இசவால்கள் என்பன பட்டியல்படுத்தி காட்ட முடியும்.ஆனால் அவற்றை நினைவுபடுத்துவதன் மூலம் அதற்கு ஈடான எதனையும் நீங்கள் பெற்றுத் தர முயற்சித்த போதும் உங்களுடன் இருக்கின்ற சில இனவாதமே தஞ்சம் இன்று இருக்கும் குழவினர் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள் என்ற யதார்த்தத்தையும் நாம் விளங்காமலில்லை.

ஆனால் இறுதி யுத்தத்தில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் குறுகிய காலத்துக்குள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.அவர்கள் விட்டுச் சென்ற அசையா பொருட்கள் அப்படியே இருந்தன.மீண்டும் அவர்கள் தமது பிரதேசங்களுக்கு சென்று வாழ்வதற்கான வசதிகள் அரசாலும்இஅரச சார்பற்ற நிறுவனங்களாலும் எற்படுத்தி கொடுக்கப்பட்டன. ஆனால் துரதிஷ்டம் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுக்க எந்த அமைப்பும் உதவி செய்யவில்லை.

வன்னி மாவட்ட மக்களது வாக்குகளை பெற்ற கட்சிகள் கூட அன்று எந்த வித ஆக்க பூர்மான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.ஆனால் பிற்பாடு அரசியலுக்கு வந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் வட மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலும் தாமும் அகதியாக வெளியேறிய ஒருவர் என்பதாலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் கவனம் செலுத்தியுள்ளதை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் மக்களுக்கு எதிரானவர் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமுமில்லை.

அன்று 3 இலட்சம் தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள்  முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யாமல் இருந்தது அவர் முஸ்லிம்களை புறக்கணித்துவிட்டார் என்ற எடுகோலுக்கு எங்களால் வரமுடியும்.அப்படியென்றால் இது குறித்து என்ன சொல்ல வேண்டும்.என்பதையும் நீங்களும் இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக செயற்படும் சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்திய அரசாங்கம் வீடமைப்புத் திட்டத்தை நடை முறைப்படுத்துகின்றது.

இதில் தனித் தமிழர்களுக்கு மட்டும் என்று எந்த இடத்திலும் அவர்கள் குறிப்பிடவில்லை.இந்திய அரசு இந்த வீடமைப்பு திட்டத்தை நடை முறைக்கு கொண்டுவர ஆலோசித்த போது இந்தியாவின் ஜனாபதியாக இருந்தவர் அப்துல் கலாம் அவர்கள் அப்படியெனில்இவீடமைப்புத் திட்டத்தில் அனைத்து வீடுகளும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன் வைப்பது நியாயமாகுமா?சிந்தணைக்கு பொருத்தமான விடயங்களையும்இபாதிப்புக்களின் அடிப்படையிலும் எதனையும் சிந்திப்பது தான் யதார்த்தமாகும்

 ஆயிரம் இந்திய வீடமைப்புத் திட்டத்தில்வடமாகாணத்தில் வவுனியா மன்னார் முல்லைத்தீவுஇயாழ்ப்பாணம்இகிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 7 ஆயிரம் வீடுகள் மட்டுமே முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எம்மை வவுனியாவில் சந்தித்த இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த்தா கூறியதுடன் ஏனைய அனைத்து வீடுகளும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்றது என்று கூறியபோது அதனை ஏற்றுக் கொண்டு தமிழ் சகோதரர்கள் அதிகமான வீடுகளை பெறுவதை வரவேற்று எமது முழுமையான பங்களிப்பினை வழங்க உறுதி தெரிவித்துள்ளதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் கிராமங்கள் தெரிவில் முஸ்லிம் கிராமங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையினை ஊடகங்கள் மூலம் பார்த்திருப்பீர்கள் என நம்புகின்றோம்.

கடந்த 20 வருட காலத்துக்குள் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டதாகவும் முஸ்லிம்அக்காலப்பகுதியில் குறிப்பிடப்படும் கிராமங்களில் வாழவில்லை ஏனெனில் அவர்கள் இடம் பெயர்ந்த நிலையில் அநுராபுரம் மாவட்டத்தில் பல அகதி முகாம்களில் வாழ்ந்த வந்ததாகவும் அதனால் அப்போது வழங்கப்பட்ட வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை என'பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தான் உண்மையும் கூட. தற்போதைய சமாதான சூழலில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு தமது இல்லறங்களை அமைத்துக் கொள்வதற்கு தேவையான காணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது.குறிப்பாக மன்னார்-வவுனியா வீதியில் அமைந்துள்ள சாளம்பைக்குளம் கிராமம் என்பது பழமை பெரும் முஸ்லிம்கள் வாழ்ந்த குடியிறுப்பாகும் ஆனால் அந்த காணிகளும் தமிழ் சகோதரர்களால் பெறப்பட்டிருந்தது.

முஸ்லிம்கள் மீள்குடியேறவந்த போதுஇஅருகிலுள்ள அரச காணிகளை பெற்றுக் கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது.இதனை தடுக்கும் வகையில் சில தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டனர். அதே போன்று தான் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் முஸ்லிம்களது காணிகள் அரச படைகளினால் பராமறிப்பு செய்யப்படுவதால் அங்கும் இதே பிரச்சினை இதனை தீர்த்து வைக்க பிரதேச செயலாளர் தலைமையில் வன இலாகாவுக்கு சொந்தமான காணிகள் உரிய முறையில் விடுவிப்பு செய்யப்பட்டு அந்த முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பு செய்ய முற்படும் போது அதைனையும் பெற்றுக் கொள்ளவிடாது தடுக்கும் அநியாயத்தை செய்கின்றனர்.

இந்த காணிகயில் ஒரு அங்குலம் கூட தமிழ் சகோதரர்களுக்கு உரித்தானது அல்ல என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும்.அப்படியெனில் எவ்வாறு தமிழ் மக்களது காணிகளை முஸ்லிம்கள் அபகரிக்கின்றனர் என்று நாக் கூசாமல் கூவித்திரிகின்றனர்.

அதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில் எற்பட்டுள்ள காணிப்பிரச்சினை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன்அய்யா அறிந்திருக்க வேண்டிய விடயங்களும் உண்டு.முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பாரம்பரியம் குறித்து நன்றாக அறிந்தவர் சம்பந்தன் அய்யா அவர்கள்.முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு முல்லையிலிருந்து வெளியேற்றப்பட்ட போது 2000 குடும்பங்கள் வரை இருந்தனர்..தற்போது அவர்களது எண்ணிக்கை 5000 தாண்டிவிட்டது.

இடம் பெயர்வுக்குள்ளான மக்களது வாக்குப் பதிவுகள் தொடர்ந்தும் முல்லையிலேயே இருக்கின்றது.இவ்வாறான நிலையில் மீள்குடியேறவரும் முல்லை முஸ்லிம்கள் எற்கனவே 12 கிராமங்களில் வாழ்தமைக்கான ஆதாரங்கள் அரச அதிபர் இபிரதேச செயலாளர்இகிராம அதிகாரிகளிடத்தில் இருக்கின்றது.அவ்வாறு இருக்கும் நிலையில் தாங்கள் வாழ்ந்த கிராமங்களுக்கு மீள வந்த முஸ்லிம்களுக்கு காணிகளின் பற்றாக்குறை காணப்பட்டது.

அதிகரித்த குடும்ப எண்ணிகையினால் அதனால் அம்மக்களது வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலணி பிரதேச செயலாளர்கள் வனபரிபால அதிகாரிகள் அரச அதிபர் ஆகியோரினால் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய முல்லைத்தீவில் இரு இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதனை அம்மக்களுக்கு பகிர்ந்தளிக்க முன்னர் அதனை துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறும் தமிழ் மக்களது காணிகள் என்பது கையகப்படுத்தப்பட்டுள்ள அந்த காணிகள் சட்ட விரோதமானது என்பதை தற்போது உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட காணிகளின் அளவினையடுத்து தெரியவந்துள்ளது.சட்ட விரோத காணி அபகரிப்புக்கு எதிராக வனவல திணைக்களம் வழக்கு தொடர எண்ணிய போதும் தமிழ் சகோதர மக்களுக்கு அதனை சட்ட பூர்வமாக பெற்றுக் கொடுக்க வன்னி மாவட்ட அபிவிருததி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மாகாண காணி ஆணையாளர் மாவட்ட அரசாங்க அதிபர் இபிரதேச செயலாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்கி தற்போது முதலில் அம்மக்களுக்கான காணி கச்சேரியும் நடத்தப்பட்டு அவர்களுக்கும் ஏக காலத்தில் அதனது உரிமையினை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளவது தார்மீக பொறுப்பாகும்.

இவ்வாறு செயற்பாடுகள் அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருன்கின்ற போது இந்த காணிகளை இரு சமூகத்தினருக்கும் பெற்றுக் கொடுத்து அவர்களை உறவுடன் வாழுவதற்கு சந்தர்ப்பம் எற்படுத்தி கொடுக்கமால் இன ரீதியாக இரு சமூகங்களையும் கூறுபோட்டு அரசியல் லாபம் தேடும் அசிங்கமான செயற்பாடு தான் முல்லைத்தீவில் இடம் பெறுகின்றது. அதே போல் அபாண்டத்தையும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரசுரித்தும் வடக்கில் தமிழ் முஸ்லிம் மக்களது உறவினை பிரிக்க துடிக்கும் தமிழ் கூட்டமைப்பு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிதாக முளைத்த அமைப்புக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளன.

அந்த அமைப்புக்களால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் அப்பட்டமான பொய்யாகும்இவன்னி மாவட்டத்தில் முன்னெடுக்ப்படும் சகல அபிவிருத்தி திட்டங்களிலும் முஸ்லிம்களை விட தமிழ் மக்களுக்கே வழங்கப்படுகின்றது.இனவாத்த்துக்கு அப்பால் மனித்த நேயத்துக்கு முன்னுரிமையளித்து மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்பட்டுள்ளார் என்பதை கடந்த கால அவரினால் அளிக்கப்பட்டுள்ள அங்கீகார அபிவிருத்தி பட்டியலை மாவட்ட செயலகங்களில் இருந்து பெற்றுத் பார்த்தால் புலனாகும்.

எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் முஸ்லிம்கள் குறித்து பேசுவதற்கு உரிமயிருக்கின்றது.அன்று முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போதுஇதடுக்க முடியாமல் போன சூழலை நாம் அறிவோம்.ஆனால் இன்று அந்த நிலையினை மாறியுள்ளது.ஜனநாயக ரீதியில் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சூழல் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீள்குடியேற வருகின்ற போது அதனை தடுக்க முன்னெடுப்புக்கள் இடம் பெறுகின்றன.

 இத்தருணத்தில் அதற்கு எதிராக செயற்பட்டு தமது சகோதர சமூகத்தினை அவர்களது சொந்த மண்ணில் மீளக் குடியேற்ற அனைத்து உதவிகளையும் முஸ்லிம்களின் தலைவராக செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து செய்ய முன்வருவது தான் பொருத்தமாகும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான நீங்கள்இபிரிக்கப்பட்டுள்ள தமிழ்-முஸ்லிம் உறவை மீண்டும் ஏற்படுத்த முன்னெடுக்கும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது அமைப்பு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதில் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கின்றது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா .சம்பந்தன் அவர்களுக்கு வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்திற்கான அமைப்பின் தலைவரும் வவுனியா நகர சபை உறுப்பினருமான அப்துல் அனுப்பியுள்ள கடிதம் Reviewed by NEWMANNAR on April 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.