மன்னார் நகரத்தில் அமைந்துள்ள என் இரட்சகர் ஆலய மிஷனரி ஊழியங்களின் தலைமை திருச்சபையின்; 25 வருட நிறைவை முன்னிட்டு 24-04-2013 ஆம் திகதி வெள்ளி விழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சென்னை, மாரநாதா பூரண சுவிசேச திருச்சபையின் தலைவர் வண. கலாநிதி. பின்னி யோசப் அவர்களும், கௌரவ விருந்தினராக சுவிற்சலாந்து மிஷனரி, வண. கலாநிதி. மாகிரட் பங்கவுசர் அவர்களும் வருகை தந்திருந்தனர்.
அத்தோடு இலங்கையின் நான்கு திசைகளிலிருந்தும் திருச்சபை தலைவர்கள் வந்து கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வின் போது வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது, அத்தோடு என் இரட்சகர் ஆலய திருச்சபையின் தலைவர் வண. வி. அமிர்தலிங்கம் அவர்களின் 30 வருட சேவையினை பாராட்டி அவர் இறையியல் பயின்ற கல்லூரி மற்றும் திருச்சபையின் சிபாரிசின் பெயரில் சென்னை யெருசலோம் பல்கலைகழகத்தினால் கலாநிதி பட்டம்( Doctor of Divinity )வழங்கப்பட்டது.
13 தை 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட என் இரட்சகர் ஆலயமானது 20 கிளைச்சபைகளோடு தனது சேவையை தனது அங்கத்தவர்களுக்கும் தனது ஸ்தல சமூகங்களுக்கும் ஆற்றி வருகிறது.
தகவல்
சகோதரி. சுபா சுரேஷ்
வெள்ளி விழா ஒருங்கமைப்பாளர்
என் இரட்சகர் ஆலய மிஷனரி ஊழியங்கள்
 |
Side view of My Saviour's Church. |
 |
Welcoming our guests |
 |
Lighting up the lamp by our chief guest Rev. Dr. Finny Joseph |
 |
Lighting up the lamp by Mannar HQI |
+by+golden+shawl+by+Rev.+V.+Amirthalingam.jpg) |
Welcoming our chief guest (Rev. Dr. Finny Joseph) by golden shawl by Rev. V. Amirthalingam |
+by+golden+shawl+by+Rev.+V.+Amirthalingam.jpg) |
Welcoming our guest of honour (Rev. Dr. M. Fankhauser) by golden shawl by Rev. V. Amirthalingam |
 |
Rev. V. Amirthalingam being awarded honourable Doctor of Divinity Award by University of Jerusalem, Chennai. for the services of 30 years towards God and humanity |
 |
Front view of participants at the silver jubilee celebration. |
 |
People who participated in the silver jubilee clebration. |
No comments:
Post a Comment