சர்வதேச கண்காணிப்பில்தேர்தல்; தேர்தல் ஆணையாளரிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்
வடக்குத் தேர்தலை முன்னிட்டு இவ்வாறானதொரு ஏற்பாடு செய்து கொடுக்கப் படாவிட்டால் அங்கு நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டியது.
அதேவேளை, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கு விசேட திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் அரசியல் கட்சிகள் நேற்று தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் செயலாளர்களை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். தேர்தல் செயலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணியிலிருந்து 5 மணிவரை இந்தச் சந்திப்பு நடந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா சுகவீனமுற்றிருப்பதால், அவர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஈ.பி. ஆர். எல்.எவ்வின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோர் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப் படுத்திக் கலந்து கொண்டனர்.
மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் உட்பட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் பலர் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சர்வதேச கண்காணிப்பில்தேர்தல்; தேர்தல் ஆணையாளரிடம் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Reviewed by Admin
on
May 04, 2013
Rating:

No comments:
Post a Comment