வாழப் போராடும் மாந்தை மக்களுக்கு உதவி கிட்டுமா?
கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் பின்னர் மக்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
ஆனாலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமையானது கவலைக்குரிய விடயமே!
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 50 வீட்டுத் திட்ட கிராமத்தில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கின்றனர். யுத்தம் தந்த காயங்களை மறந்து முன்னேறத் துடிக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டம் மிகக் கடினமானது. இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணியற்றவர்களுக்கு வழங்கப்பட்டன.
வீடுகள் வழங்கப்பட்ட போதிலும் அன்றாட வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவைகளும் அடிப்படை வசதிகளும் இன்றும் கேள்விக்குரியதாகவே உள்ளது. பதைகள் சீரமைக்கப்படாத நிலையில் இவர்களது பயணங்களோ பெரும் சிரமங்களுக்கு மத்தியிலேயே நகர்கின்றன.
குடிநீரைக் கொடுக்கும் குழாய்க் கிணறுகளோ சேதமடைந்திருப்பதால் நீண்ட தூர நடைப்பயணத்தின் பின்னர் நீரை பெற்றுக்கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. காட்டு யானைகளும் இவர்களின் வாழ்வில் தாக்கத்தை செலுத்த, இவர்களது கவலைகளோ, பிரச்சினைகளோ அதிகாரிகளின் காதுகளை எட்டவில்லை. யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து இன்று வாழப்போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமா?

Reviewed by NEWMANNAR
on
May 09, 2013
Rating:

No comments:
Post a Comment