மீன்கள் உயிரிழந்தமைக்கு இரசாயன நச்சுப் பதார்த்தங்களே காரணமாக இருக்கலாம் - நாரா
அத்திடிய பகுதியிலுள்ள நீரோடைகளில் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் உயிரிழந்தமைக்கு அந்தப் பிரதேசத்தில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய இரசாயன நச்சுப் பதார்த்தங்கள் நீரில் கலந்தமையே பிரதான காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து இந்த விடயத்தை அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் சசுர சமரதுங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுவாக மழைக் காலங்களில் நீரில் ஒட்சிஜன் குறைவடைவதனாலும் மீன்கள் இறக்கும் நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அத்திடிய பகுதியில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய நச்சு இரசாயனப் பதார்த்தம் நீருடன் கலந்ததன் காரணமாகவே பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் உயிரிழந்ததென ஊகித்துள்ளதாகக் கூறினார்.
மீன்கள் உயிரிழந்தமைக்கு இரசாயன நச்சுப் பதார்த்தங்களே காரணமாக இருக்கலாம் - நாரா
Reviewed by Admin
on
May 14, 2013
Rating:

No comments:
Post a Comment