மன்னாரில் றோளரை நிறுத்தினால் நாங்களும் நிறுத்துவோம்; குருநகர் கடற்றொழிலாளர்கள்
மன்னார் கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகினை நிறுத்தும் வரை நாங்களும் நிறுத்த மாட்டோம் என குருநகர் கடற்றொழிலாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இழுவைப்படகு பயன்பாட்டினை நிறுத்திவிட்டு மாற்று மீன்பிடி முறையினை மேற்கொள்வதற்கு தமக்கு அனுமதி வழங்குவதுடன் அதற்கான உபகரணங்களையும் வழங்குமாறு குருநகர் மீனவர்கள் ஏற்கனவே கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனையடுத்து மாற்று தொழிலில் ஈடுபடுபவர்களது விபரங்கள் திரட்டுவதற்காக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தலைமைக் காரியாலய உதவிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினருக்கும் குருநகர் மீனவர் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பும் நடாத்தப்பட்டது. எனினும் குருநகர் கடற்றொழிலாளர்கள் ஒரு சிலரைத் தவிர பலர் சமூகம் தரவில்லை.
அத்துடன் கோரிக்கையினையும் ஏற்க மறுத்துவிட்டனர். அத்துடன் மன்னார் கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகினையே தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அவர்களும் இந்த மீன்பிடி முறையினை நிறுத்தும் வரை நாமும் நிறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையினரிடம் கேட்ட போது மாற்று தொழிலை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்வரும் காலங்களில் இழுவைப் படகினை பயன்படுத்துவார்கள் எனினும் கடுமையான நடவடிக்கைகளை அமைச்சின் அனுமதியுடன் மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார். இதேவேளை குருநகர் கடற்றொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் இருந்து இழுவைப் படகினை பயன்படுத்தி தொழிலினை மேற்கொள்வதனை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
May 02, 2013
Rating:

No comments:
Post a Comment