ஜீவனோபாய உதவியாக வழங்கப்படும் கால்நடைகளின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

வழங்கப்பட்ட பசுக்களின் பாற்காம்புகளில் மெசின் மூலம் பால்கறந்த தடயங்களும் நன்கு தென்படுகின்றன.பாலும் குறைவாகவே சுரக்கின்றன.இவ் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை உண்மையில் மேன்படுத்த வேண்டுமாயின் தரமான கறவைப்பசுக்களும்,ஆடுகளும் வழங்கப்பட்டிருக்கவேண்டும் மாறாக பாற்பண்ணைகளில் இருந்து கழித்தொதுக்கப்படும் பசுக்களையும்,ஆடுகளையும் வழங்குவது என்ன? நியாயம்.
நன்கொடையாளர்கள் தரமான ஆடுமாடுகளைப் பெற்றுக்கொடுக்கவே நிதிவழங்குகின்றனர்.அந்த அரசசார்பற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆடு,மாடு என்பன பயனாளிகளின் கரத்தில் கிடைத்து 2,3 நாட்களில் அவை இறந்த சரித்திரமும் உண்டு.அப்பாவி மக்கள் ,தமக்கு இலவசமாகக்கிடைக்கிறது என்பதற்காக எவ்வித மாற்றுக்கருத்துமின்றி அதனைப்பெற்றுக்கொள்கின்றனர்.
தரமான ஆடு,மாடுகளைப் ;பெற்றுக்கொடுப்பதில் முசலிப்பிரதேச மிருகவைத்தியர்.முசலிப்பிரதேச செயலாளர்.பிரதேசசெயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் போன்றோர் பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும்.இதில் எங்கே தவறு இடம்பெற்றுள்ளது என்பது கண்டறியப்படவேண்டும்.இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் தரமான கால்நடைகள் ;வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு கீழ்ச்சொல்லப்பட்ட மூவரையும் சாரும்.
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
ஜீவனோபாய உதவியாக வழங்கப்படும் கால்நடைகளின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
May 16, 2013
Rating:

No comments:
Post a Comment