அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகள்


இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தினால் 2013ம் ஆண்டிற்கான அகில இலங்கை 17 வயதுப்பிரிவினர்க்கான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியானது இம்மாதம் 18ம் 19ம் 20ம் திகதிகளில் மன்னாரில் நடைபெறவுள்ளது.


இப்போட்டிகள் யாவும் மன்னார் பொது விளையாட்டரங்கில் 18.05.2013 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு  மன்னார் பொது விளையாட்டரங்கிலும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மைதானத்திலும் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

இவ் ஆரம்ப விழாவிற்கு பிரதம விருந்தினராக கௌரவ அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக கௌரவ வட மாகாண ஆளுநர் சந்திரசிறி அவர்களும், வன்னி விளையாட்டு குழு தலைவரும்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய உனைஸ் பாருக் அவர்களும், கல்வி அமைச்சின் விழளயாட்டுத்துறை பணிப்பாளர் அபேரத்ன அவர்களும் மன்னார் அரச அதிபர் சரத் ரவீந்திர அவர்களும் வன்னி படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொணிபஸ் பெரேரா அவர்களும் மன்னார் நகர பிதா ஞானபிரகாசம் அவர்களும்  மன்னார் வலய கல்விப்பணிப்பாளர் சியான் அவர்களும் ,மடு வலய கல்விப்பணிப்பாளர் யுசேபியஸ் குருஸ் அவர்களும்,  ஐனுஆ நிறுவனத்தின் சர்வதேச பணிப்பாளர் ஜனகன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இப்போட்டியில் இலங்கையின் மாவட்டங்களில் வெற்றியீட்டிய 24 அணிகள் பங்குபற்றவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்திலான உதைபந்தாட்டப்போட்டியானது மன்னாரில் நடைபெறுவது இதுவே இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகும். இப்போட்டியை இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம்  நடாத்துகின்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வை சிறப்பித்து கண்டு கழிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



அருட்சகோ. அகஸ்ரின்                                               ப. ஞானராஜ்

உபதலைவர்                                                  மாவட்ட இணைப்பாளர்

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம்
மன்னாரில் தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டிகள் Reviewed by NEWMANNAR on May 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.