இரவு நேரத்தில் பயணிகளை நடு வீதியில் இறக்கி விட்டு டிப்போவிற்கு சென்ற அரச பேருந்து-மன்னாரில் சம்பவம்.
இலஙகை அரச போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பயணிகளை நடு வீதியில் இறக்கி விட்டு டிப்போவிற்கு சென்ற சம்பவம் நேற்று புதன் கிழமை (15-05-2013) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கையில்,,,
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து தோட்டவெளி நோக்கி மாலை 6.30 மணிக்கு பயணிக்கும் பேரூந்த மாலை 7 மணியளவில் தோட்டவெளி கிராமத்தை சென்றடைந்து மீண்டும் தோட்டவெளியில் இருந்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தை நோக்கி வருவதே வழமை.
ஆனால் நேற்று(15-05-2013) புதன் கிழமை இரவு 7 மணியளவில் சுமார் 15 பயணிகளுடன் தோட்டவெளி கிராமத்தில் இருந்து மன்னார் தரிப்பிடம் நோக்கி பயணித்த அரச பேருந்து தாராபுரம் வீதியூடாக வந்து பொது விளையாட்டு மைதான வீதியூடாக சென்று மன்னார் பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.
பின் பேருந்தில் இருந்த அணைத்து பயணிகளையும் குறித்த பேருந்தின் நடத்துனரும்,சாரதியும் இணைந்து இறக்கி விட்டு குறித்த பேருந்தை டிப்போவிற்கு எடுத்துச் சென்றனர்.
குறித்த பேருந்து மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்று பயணிகளை இறக்கி விட்டுச் செல்வதே வழமை.
இந்த நிலையில் குறித்த பயணிகளை இரவு நேரத்தில் நடு வீதியில் இறக்கி விட்டுச் சென்றமையினால்
ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள் என அணைவரும் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர்.
மீண்டும் வைத்தியசாலை சந்தியில் இருந்து குறித்த பயணிகள் நடந்தும்,தனியார் வாகனங்களிலும் பயணித்தே மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தை சென்றடைந்ததாக பாதி க்கப்பட்ட பயணிகள் தெரிவித்தனர்.
தோட்டவெளியில் இருந்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடம் வரை கட்டணமாக 30 ரூபாய் அறவிடப்பட்ட போதும் தாங்கள் இடை நடுவே விட்டுச்செல்லப்பட்டுள்ளதாக பாதி க்கப்பட்ட பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மாலை 7 மணிக்கு தோட்ட வெளியில் இருந்து மன்னார் அரச போக்குவரத்து தரிப்பிடம் நோக்கி பயணிக்கும் குறித்த பேருந்து கடந்த 3 தினங்களுக்கு மேலாக உரிய வீதிகளை கடைப்பிடிக்காது குருக்கு வீதியூடாக சென்று பயணிகளை நடு வீதியில் இறக்கி விட்டு டிப்போவிற்குச் செல்வதாக தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை முகாமையாளரை தொடர்பு கொண்ட போதும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.
-மன்னார் நிருபர்-
இரவு நேரத்தில் பயணிகளை நடு வீதியில் இறக்கி விட்டு டிப்போவிற்கு சென்ற அரச பேருந்து-மன்னாரில் சம்பவம்.
Reviewed by NEWMANNAR
on
May 16, 2013
Rating:
No comments:
Post a Comment