மன்னாரில் முதல் தடவையாக தேசியமட்ட உதைப்பந்தாட்டப்போட்டி ஆரம்பம்(படங்கள் )
-குறித்த போட்டி தொடாந்து 19 ஆம்,20 ஆம் திகதி வரை இடம் பெறும்.மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போட்டி மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் தாழ்வுபாடு உதைப்பந்தாட்ட மைதானத்திலும் இடம் பெற்று வருகின்றது.
ஆரம்ப விழாவிற்கு பிரதம விருந்தினராக அமைச்சர் றிஸாட் பதீயூதின் அவர்களும்,சிறப்பு விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,வன்னி மாவட்ட விளையாட்டுக்குழுவின் தலைவருமாகிய ஹீனைஸ் பாரூக்,மற்றும் விருந்தினர்கலாக அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஆரியரட்ன,செயலாளர் சந்தி மில்ரஸ் ஜெயசூரிய, மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த போட்டியில் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் 24 அணிகள் பங்குபற்றுவதற்காக வருகை தந்துள்ளனர்.
குறித்த போட்டியானது இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கத்தின் போட்டிச் செயலாளரும்,மாவட்ட உதைப்பந்தாட்ட இணைப்பாளருமான ப.ஞானராஜ் தலைமையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் இங்கே அழுத்தவும்
படங்கள் இங்கே அழுத்தவும்
மன்னாரில் முதல் தடவையாக தேசியமட்ட உதைப்பந்தாட்டப்போட்டி ஆரம்பம்(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
May 18, 2013
Rating:
No comments:
Post a Comment