அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் செபஸ்ரியார் ஆலய பிரதான வீதியின் அவல நிலை.(படங்கள்)

மன்னார் செபஸ்தியார் பேராலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஏற்பட்ட பாரிய குழி இதுவரை சீர் செய்யப்படாததன் காரணத்தினால் குறித்த வீதியில் தற்போது பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


குறித்த வீதி நாற்சந்தி வீதியாக காணப்படுதின்றது.கனரக வாகனங்கள் பல நூற்றுக்கணக்கானவை நாளந்தம் குறித்த வீதியூடாக சென்று வருகின்றது. குறித்த வீதி மன்னார் வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதியாகவும் காணப்படுகின்றமையினால் தற்போது நோயளர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் அம்புலன்ஸ்  வண்டி உரிய வேகத்தில் செல்ல முடியாது இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

 எனவே உரிய அதிகாரிகள் குறித்த வீதியில் ஏற்பட்டுள்ள பாரிய குழியை மூடி வீதியை செப்பனிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும்,பாதசாரிகளும் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் செபஸ்ரியார் ஆலய பிரதான வீதியின் அவல நிலை.(படங்கள்) Reviewed by NEWMANNAR on June 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.