இந்திய இழுவைப்படகுகளின் வருகையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க நாம் ஒருமித்து குரல் கொடுப்போம். ஏம்.எம்.ஆலம்.
இந்திய இழுவைப்படகுகளின் வருகையால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க நாம் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாச தலைவர் எம்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,,
கடந்த 30 வருடங்கள் இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக எமது மக்கள் கடல் தொழில் புரிவதில் பல தடைகளை எதிர்கொண்டனர்.
நேரக்கட்டுப்பாடு, தூரக்கட்டுப்பாடு, மற்றும் பாஸ் நடைமுறை போன்ற காரணங்களால் தொழிலில் பாரிய இடர்களை சந்தித்தனர்.
இக்காலப்பகுதியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தாங்கள் நினைத்தவாறு எமது கடற்பரப்பில் தொழில் புரிவதை வழக்கமாக்கியதுமில்லாமல் தற்போது பாரம்பரியமாக தாங்கள் தொழில் புரியும் இடம் என நியாயம் செய்யவும் முற்படுகின்றனர்.
இந்திய மீனவர்களின் வருகையால் எமது கடல் வளங்கள் அழிவதோடு, அரியவகை மீன் வகைகள் அழிக்கப்படுகின்றது. அல்லது அகற்றப்படுகின்றன.
எமது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள இழுவை மடி வலைகளை கொண்டு பெறுமதியான கடலுணவுகளை களவாடுகின்றனர். இவ்வாறான தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை எமது மீனவர்கள் தொழில் செய்ததை நாம் தடுத்து வருகின்றோம். இருந்தும் எமது மீனவர்கள் இவ் இந்திய இழுவைப்படகின் வருகையை காரணம் காட்டி தடைசெய்யப்பட்ட தொழில்களை செய்ய முற்படுகின்றனர்.
இதனால் திணைக்கள அதிகாரிகளும் மீனவர் சங்கங்களும் இவ் மீனவர்களுடன் முரண்பட வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. 45 நாள் தடைக்காலம் முடிந்தவுடன் இவர்களின் வருகை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த எமது மீனவர்கள் கடந்த ஜூன் 03 ந் திகதி தொடக்கம் இவர்களின் தொடர் வருகையால் இத்துயர வாழ்க்கை எமக்கு தொடர் கதைதானா? என கரையில் நின்று கடலைப்பார்த்தவர்களாக ஏங்கி நிற்கின்றனர்.
நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதான காலம் ஏற்பட்ட போது தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் தனது உழைப்பின் மூலம் குடும்ப நிலையை ஒரளவு உயர்த்த முடியும் என எதிர்பார்த்த இம்மக்கள் ஏமாற்றம் அடைந்தவர்களாக விரக்தியில் உள்ளனர்.
இக் கடற்தொழிலை நம்பி பத்தாயிரம் குடும்பங்களும் இவர்களுடாக முப்பத்தைந்து ஆயிரம் குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் இத் தொழிலில் மன்னார் மாவட்டத்தில் ஒன்பது ஆயிரம் படகுகள் இக் கடல் பிரதேசத்திலே தொழில் புரிகின்றன. மேலும் பல வருடங்களாக இந்திய இழுவைப்படகின் வருகையால் வாரத்தில் மூன்று தினங்களே தொழில் புரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய இழுவைப்படகுகளில் வருபவர்கள் மீனவர்களா? அல்லது கூலி ஆட்களா? என எமக்கு புரியவில்லை. ஏனெனில் உண்மையான மீனவன் இன்னும் ஒரு மீனவனின் வயிற்றில் அடித்து தன் வயிற்றை நிரப்பமாட்டான் இவ்வாறான கூலி ஆட்கள் அல்லது எஜமானர்களின் ஏவலாளர்கள் எஜமான் ஏவிவிடும் வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள்.
உண்மையில் இவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது பற்று பாசம் தமிழ் உணர்வு உள்ளவர்களாக இருந்தால் இப்பகுதியில் நாம் இவ்வளங்களை சுரண்டுவதால் பாதிப்படைவது இங்கு வாழும் தமிழ் மக்கள்தான் என இவர்கள் புரிந்து இருப்பார்கள்.
தமிழக அரசியல் தலைவர்களும் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கை கடற்பரப்பில் தொழில் புரிவதை புரிந்தும் புரியாதது போல் நடந்து கொள்வதும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வழி தேடாமல் இதற்கான தீர்வை தமது மீனவர்களுக்கு பெற்றுக்கொடுக்காமல் இருப்பதும் இந்திய மீனவர் தொழில் புரியும் எமது கடல்பகுதி தங்களது பாரம்பரிய தொழில் புரியும் பகுதியென இவர்கள் கூறுவது அவர்களின் அரசியல் நலன் சார்ந்ததாகவே உள்ளது. இங்கும் தமிழர்கள் வாழ்கின்றார்கள்.
இவர்கள் தொழில் புரிவது தமிழர் வாழும் பகுதி என்ற உண்மையை உணர்ந்து மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் இத்தொழிலில் ஈடுபடும் தமது மீனவர்களுக்கு மாற்று தொழில் முறைகளை உருவாக்கி கடல் வளங்களை அழிக்கும் இத்தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதைவிடுத்து வெறுமனே உணர்ச்சியான வசனங்களை பேசிக் கொண்டும் தமிழர்களுக்கு நாம் குரல் கொடுக்கின்றோம். எமது தொப்பிள் கொடி உறவு என பிதற்றுவதும் எவ்வகையிலும் நியாயமாகாது. எமது வளங்களை சுரண்டிவிட்டு நிவாரணங்களை வழங்குவதால் என்ன பலன்? இவைகளால் எமது மீனவர்களுக்கு என்ன பயன்?
எல்லைதாண்டிவரும் இவ் இந்திய இழுவைப்படகு வருகையை எமது மக்கள் தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில் இதற்கான தீர்வுதான் இன்றுவரை கிட்டவில்லை.
எனவே எமது பாரளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர்களே, இச்சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களே இது தொடர்பில் உங்கள் குரலும் உரிய இடங்களில் ஒலிக்க வேண்டும்.
எமது வளங்களை எமது மீனவர்கள் அனுபவிக்க நீங்கள் வழிசமைத்து கொடுப்பதுடன், எதிர்கால எமது சந்ததிக்காக கடல் வளங்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள். சட்ட விரோதமான தொழில் முறை செய்வதை தடுக்க தங்கள் பங்களிப்பையும் வழங்குங்கள்.
எல்லைதாண்டிவரும் இந்திய மீனவர்களை தடுக்க நடைமுறை சாத்தியமான வழிகளை ஆராய்ந்து செயற்படுத்த இரு அரசுக்கும் ஆலொசனை வழங்குங்கள்.
இவை விரைவாகவும் துரிதமாகவும் செயற்பட வேண்டும். இவை சாத்தியமாகாத பட்சத்தில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் எமது கோரிக்கையான இந்திய மீனவர்களின் வருகையை எதிர்த்து அனைத்து இன மக்களையும் மீனவர்களையும் ஒன்று திரட்டி எமது எதிர்ப்பை வெளிக்காட்டுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
June 14, 2013
Rating:

No comments:
Post a Comment