அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மாணவர்களுக்கு ஒரு கப் பால் வழங்கும் திட்டம் ஆரம்பம்.

 உலக உணவுத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் நடமுறைப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஒரு கப் பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று திங்கட்கிழமை மன்னார் கல்வி வலயத்தில் மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் எம்.எம்.சியான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்-பரிகாரிக்கண்டல் அ.த.க.பாடசாலையில் குறித்த நிகழ்வு இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கப் பால் வழங்கப்பட்டதோடு ஒவ்வெரு மாணவர்களுக்கும் ஒரு கிலோ பேரீச்சம்பழமும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,கௌரவ விருந்தினராக முருங்கன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஒஸ்மன் சால்ஸ்,மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி திணைக்களத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் லியோன் றெவல்,முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி வெற்றி நாதன் லெம்பேட்,மன்னார் பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.ஆரோக்கிய நாதன்,மன்னார் மாவட்டச்செயலகத்தின் உலக உணவுத்திட்ட அதிகாரிகள்,படைத்தரப்பினர்,மதத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பால் மற்றும் பேரீச்சம் பழம் ஆகியவற்றை வழங்கி வைத்தனர்.












மன்னாரில் மாணவர்களுக்கு ஒரு கப் பால் வழங்கும் திட்டம் ஆரம்பம். Reviewed by Admin on June 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.