சிலாவத்துறை வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும்
முசலிப் பிரதேசத்தில் உள்ள ஏறத்தாழ 30 கிராமங்களைச் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இருக்கும் ஒரே வைத்தியசாலை சிலாவத்துறை வைத்தியசாலையாகும் மேலும் இப்பிரதேசத்தில் இப்பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலைகளோ தனியார் டிஸ்பன்சரிகளோ இல்லை.
இப்பிரதேச மக்கள் முழுக்க நம்பியிருப்பது சிலாபத்துறை வைத்தியசாலையையாகும். ஆனால் இப்பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள், கடற்படையினர் போன்றோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில் இவ்வைத்தியசாலையில்லை. இவ்வைத்தியசாலையின் ஆளணி விபரம் வைத்தியர்கள் ஆண்கள் இருவர் உள்ளனர்.அவர்கள் சிங்கள மொழி பேசுபவர்கள், 01 ஆண் தாதியும், 01 பெண் தாதியும், 01 மிட்வைப் உம், 01 மருந்தாளரும் உள்ளனர். இங்கு செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் தொற்றா நோய்களுக்கான கிளினிக்குகள் இடம்பெறுகின்றன.
இந்த நாட்களில் பெரிதும் நெரிசல் ஏற்படுவதைக் காணமுடிகின்றது. இப்பிரதேசம் காடுகள் நிறைந்து அழிக்கப்பட்ட பிரதேசமாக இருப்பதனால் விசப்பாம்புகளின் அச்சுறுத்தல்களையும் இப்பிரதேச மக்கள் எதிர் கொள்கின்றனர். நோய் தீவிரம் அடைந்தவர்கள், பல கிலோமீற்றர்கள் தூரத்தில் உள்ள மன்னார்,அநுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
பயண வழியிலேயே பல இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இவ்வைத்திய சாலையில் கடமைபுரியும் இருசிங்கள வைத்தியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள், இதேவேளையில் எமது மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்ட 20க்குட்பட்ட பல் மருத்துவர்களும், ஏனைய மருத்துவர்களும் ஏனைய மாவட்டங்களில் கடமை புரிகின்றனர்.
உண்மையில் இவ்வைத்தியர்களுக்கு எமது மக்கள் மீதும், எமது மண்ணின் மீதும் ஒருபாசம் இருக்குமானால் அவர்கள் எமது பிரதேசத்திற்குத் திரும்பி பணிபுரிய வேண்டும். எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த சிங்கள வைத்தியர்களால் எமது பிரதேசத்திற்குச்சென்று அங்குள்ள கஷ்டங்களையெல்லாம் சகித்துக்கொண்டு சேவை செய்யமுடியுமென்றால் ஏன்?. எங்களால் முடியாது.
முசலிப்பிரதேசத்தில் புதிதாக 3 கிராமிய வைத்தியசாலைகள் அமைக்கும் பணிகள்,வேப்பங்குளம்,பண்டாரவெளி,மறிச்சுக்கட்டி போன்ற பிரதேசங்களில் நடைபெற்று வருவதாகவும்,அங்கு ஒவ்வொரு மருத்துவரும் ,தாதிமாரும் நியமக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் தெரிவித்தார்.
இதனால் இப்பிரதேச மக்களின் சுகாதாரத்தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். முசலிப்பிராந்தியத்தில் உள்ள 30 கிராமங்களுக்கும் தலைநகராக உள்ள சிலாவத்துறையில் உள்ள பிரதேச வைத்தியசாலை துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு ஆதார வைத்தியசாலையாக மாற்றவேண்டியது கட்டாயத்தேவையாகும். ..உடனடியாக வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வைத்தியசாலையைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட வேண்டும். வைத்தியசாலைச்சுற்றாடலில் உள்ள புற்களும் பற்றைகளும் அழிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலைச் சுற்றாடலில் பூக்கன்றுகள் நடப்பட்டு அழகுபடுத்தப்படவேண்டும். இவ்வைத்தியசாலைக்கான விடுதிகள் ,வாட்டுகள் என்பன போதாதுள்ளது.அவை புதிதாக அமைக்கப்படவேண்டும். சிறுவர் பிரிவு,மகப்பேற்றுப்பிரிவு,சத்திரசிகிச்சைப்பிரிவு,அவசர சேவைப்பிரிவு,விபத்துப்பிரிவு,மருத்துவ ஆய்வுகூடப்பிரிவு,எக்ஸ்ரே பிரிவு.உளநலப்பிரிவு,பற்சிகிச்சைப்பிரிவு,போன்றவை உருவாக்கப்படவேண்டும்
சத்திரசிகிச்சை நிபுணர்,விசேடவைத்தியர்கள்,பெண்ணியல் மருத்துவ நிபுணர்கள்,ஏனைய வைத்தியர்கள்,தாதியர்கள்.மருத்துவ ஆய்வுகூடத் தொழிணுட்பவியலாளர்கள்,ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்கள்,சிறுபணியாளர்கள் போன்றோர் நியமிக்கப்படவேண்டும்.
மேற்சொன்ன விடயங்களைச் செயற்படுத்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சேனநாயக அவர்களும்.அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும்,முசலிப்பிரதேச சபைத் தவிசாளர் அ.வ.எஹியான் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிரதேச மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
கே.சி.எம்.அஸ்ஹர்

Reviewed by Admin
on
June 24, 2013
Rating:

No comments:
Post a Comment