அண்மைய செய்திகள்

recent
-

ஆசிரிய உதவியாளர்களாக தொண்டராசிரியர்கள் நியமனம்

ஆசிரிய உதவியாளர்களாக வன்னி கல்வி வலயங்களில் கடந்த பல வருடங்களாக பணியாற்றிய தொண்டராசிரியர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.


வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் மடு வலயத்தில் 43 பேருக்கும், துணுக்காய் வலயத்தில் 78 பேருக்கும், முல்லைத்தீவு வலயத்தில் 86 பேருக்கும், வவுனியா வடக்கு வலயத்தில் 24 பேருக்குமாக 231 பேருக்கு ஆசிரிய உதவியாளர் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தொடராக எடுத்துவந்த முயற்சியின் பலனாக இந்த ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

 வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மு. சந்திரகுமார், வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, ஜனாதிபதியின் இணைப்பாளர்களான ச. கனகரத்தினம், பிரேமரத்தின சுமதிபால,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி , வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன், வட மாகாண ஆளுனரின் இணைப்பாளர் முகைதீன், வட மாகாண கல்விப்பணிப்பாளர் வ. செல்வராசா உட்பட பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.







ஆசிரிய உதவியாளர்களாக தொண்டராசிரியர்கள் நியமனம் Reviewed by Admin on June 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.