அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வு ஆரம்பம்.(படங்கள்)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானசீலன் குனசீலன் தலைமையில் இன்று திங்கட்கிழமை மன்னாரில் அரம்பமானது.


சுகாராத திணைக்களத்துடன் இணைந்து மன்னார் பிரதேசச செயலகம்,மன்னார் பொலிஸார்,மன்னார் மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்,மன்னார் உலக தரிசன நிறுவனம்(வேல்விசன்),கிராம சேவையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானசீலன் குனசீலன்,மன்னார் பிரதேசச் செயலகத்தின் கிராம  அலுவலர்களுக்கான நிர்வாக அலுவலகர் எஸ்.ஏ.ராதா பெணாண்டோ,மன்னார் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.
- குறித்த வேலைத்திட்டம் இன்று முதலாம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.

-இன்று 1 ஆம் திகதி சாந்திபுரம்,தோட்டக்காடு,செல்வ நகர் ஆகிய கிராமங்களில் குறித்த டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம் பெற்றது.

குறித்த கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் செல்லும் மன்னார் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோகர்கள் குறித்த வீடுகளை பரிசோதனை செய்து கொள்வதோடு டெங்கு நுளம்பு பரவ சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை சிரமதானம் செய்ய அறிவுரைகள் வழங்கி வந்தனர்.

 நாளை 2 ஆம் திகதி எமிழ் நகர்,3 ஆம் திகதி மூர்வீதி,4 ஆம் திகதி உப்புக்குளம், 5 ஆம் திகதி பேசாலை 4 ஆம் வட்டாரத்திலும்,6 ஆம் திகதி ஜோசப்வாஸ் நகரிலும், 7 ஆம் திகதி மன்னார் சுகாதார பணிமனையிலும் குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம் பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஞானசீலன் குனசீலன் தெரிவித்தார்.

குறித்த தினங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் காணுதல்,அதனை அழித்தல்,மக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், தேவைப்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் இடம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.










மன்னாரில் தேசிய டெங்கு ஒழிப்பு வார நிகழ்வு ஆரம்பம்.(படங்கள்) Reviewed by Admin on July 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.