மெத்தா செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிலையத்தின் நடமாடும் சேவை
எதிர் வரும் 5.7.2013 இல் மாங்குளம் தமிழ் மகா வித்தியாலயத்தில் காலை8.00 தொடக்கம் மாலை 5.00வரை மாங்குளம் துணுக்காய் முறிகண்டி மேற்படி சேவை நடை பெறும்.
தயவு செய்து ஆசிரியர்கள் பெற்றோர்கள் புதிய கைகால் பொருத்த வேண்டி இருப்பின் அன்றைய தினம் சமுகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் அதிபர்கள் உங்கள் பாடசாலை சமுகத்துக்கு தகுந்த அறிவுரைகள் வழங்குமாறு அன்புடன் கேட்கின்றோம்.
இதை தொடர்ந்து 6.7.2013- 7.7.2013ஆகிய இரு நாட்கள் முல்லைத்தீவு மணற்குடியிருப்பு மீனவர் அபிவிருத்தி கட்டிடத்தில் மேற்ப்படி இலவச சேவை நடை பெறும் இதில் ஆனிமாதத்தில் அளவு எடுக்கப்பட்டவர்கள் அவசியம் சமுகமளிப்பதுடன் புதிய நபர்களுக்கும் அளவு எடுக்கப்படும்.
தகவல் திரு.சின் கிலேயர் பீட்டர்
மெத்தா நிறுவனம்
மன்னார்.
மெத்தா செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிலையத்தின் நடமாடும் சேவை
Reviewed by Admin
on
June 29, 2013
Rating:

No comments:
Post a Comment