மாடியில் இருந்து குதித்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்

இவர் இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
-->
நேற்று (17) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழக கட்டடம் ஒன்றின் ஐந்தாம் மாடியிலிருந்து குறித்த மாணவி கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் 23 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இவ்வாண்டு மே மாதத்திலேயே பல்கலைக்கழகத்திற்கு நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாடியில் இருந்து குதித்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்
Reviewed by NEWMANNAR
on
June 18, 2013
Rating:

No comments:
Post a Comment