வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற அரசாங்கம் தீவிர முயற்சி: புளொட்

ஜனாதிபதி மஹிந்த, தனது அடுத்த ஆட்சிக் காலத்திலும் ஜனாதிபதியாக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கிடையில் வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.
'குறிப்பாக மன்னாரில் முஸ்லீம் மக்களையும், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசத்தில் சிங்கள மக்களையும் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் சில வருடங்களி;ல் முல்லைத்தீவு மாவட்டம் சிங்கள மாவட்டமாக மாறும் வாய்ப்புக்கள் இருக்கிறது' என்றும் அவர் தெரிவித்தார்.
'அண்மையில் வலிகாமம் வடக்கில் சுவீகரிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளின் கூட சிங்கள குடியேற்ங்கள், இராணுவக் குடும்பங்களுக்கான குடியிருப்புக்கள் போன்றன அமைத்து இந்த குடிப்பரம்பலை மாற்றும் வேலையாகவும் அமையலாம். இது தொடர்பில் ஐரோப்பிய தூதுவர்களுக்கு தெரிவிக்கும் போது, அதன் தார்ப்பரியத்தை அவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள் இல்லை' என்றார்.
'அரசாங்கம் தற்போது எதுக்கெடுத்தாலும் தெரிவுக்குழு என்று சொல்லி வருகின்றது. இந்த தெரிவுக்குழுவிலும் நியாயம் கிடைக்கும் என்று சொல்லி வருகின்றது. இதற்குள் கூட்டமைப்பு சென்று இதில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேசத்திற்கு சொல்லவேண்டும். தெரிவுக் குழுவில் நியாயமான தீர்வை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளை சர்வதேசம் புரிந்துகொண்டுள்ளது. புத்திசாதுரியமாகச் செயற்படுவதாக நினைத்துக்கொண்டிருந்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு செல்லாது. சர்வதேசத்தின் தலையீடுகள் நிச்சயம் இருக்கும். அது எந்தமாதிரி அமையும் என்று இப்போது சொல்ல முடியாது' என்றார்.
வடக்கில் குடிப்பரம்பலை மாற்ற அரசாங்கம் தீவிர முயற்சி: புளொட்
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:

No comments:
Post a Comment