வடமாகாணசபை தேர்தல் தாமதமாகாது: அமைச்சர் நிமால்
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் பின்நிற்பதை காரணம் காட்டி, வடமாகாணசபை தேர்தலை பிற்போட முடியாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்...
13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதை முடிவுபண்ண தமக்கு கால அவகாசம் வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் கூறியுள்ளன. இது வெறும் காலத்தை கடத்தும் நடவடிக்கையாகும்.
எது எவ்வாறிருப்பினும் திட்டமிட்டபடி குறித்த தினத்தில் வடமாகாணசபை தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற குழுவில் இவர்கள் அங்கம் வகிக்காவிட்டாலும், நாடாளுமன்ற குழுவின் முடிவிற்காக காத்திருக்காமல் குறித்த திகதியில் வடமாகாணசபை தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.
வடமாகாணசபை தேர்தல் தாமதமாகாது: அமைச்சர் நிமால்
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:

No comments:
Post a Comment