நுவரெலியா பஸ் விபத்தில் மூவர் பலி, 70பேர் காயம்
நுவரெலியா சீதா-எலிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் பலியானதுடன் 70 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் நான்கு மணியளவில் விபத்தில் சிக்கிய இந்த பஸ் வண்டியானது பதுளையில் இருந்து நுவரெலிய பகுதிக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்து வந்த தனியார் பஸ் என நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பஸ் வண்டியானது அக்கல பூங்காவிற்கு அருகில் பாதையை விட்டு விலகிச்சென்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கற்பாறையில் மோதி ஆற்றை அடைந்துள்ளது.
இந்த பஸ்ஸில் நமுனுகுல பாடசாலையை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.
பலியாகியவர்களின் சடலங்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக நுவரெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நுவரெலியா பஸ் விபத்தில் மூவர் பலி, 70பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
June 20, 2013
Rating:

No comments:
Post a Comment