முழந்தாளிடவைத்த உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு: பாடசாலையும் மூடப்பட்டது

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ஆசிரியை முழந்தாளிடவைத்த உறுப்பினருக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதையடுத்து நவகத்தேகம நவோதய பாடசாலை நேரகாலத்துடன் மூடப்பட்டுவிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலைக்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
முழந்தாளிடவைத்த உறுப்பினருக்கு விளக்கமறியல் நீடிப்பு: பாடசாலையும் மூடப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:

No comments:
Post a Comment