கோஷ்டி மோதலில் வாள் வெட்டு வலது கையை இழந்த இளைஞர்

தேவானந்தன் பிரசன்னா (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கோயிலடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியின் போது நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கைகலப்பாகி வாள் வெட்டில் முடிந்துள்ளது. வாள் வெட்டுக்கு இலக்கான குறித்த இளைஞரை சுற்றிவளைத்த சுமார் 15 பேர் கொண்ட குழு அவரை சரமாரியாக தாக்கியதுடன் வாள் வெட்டையும் நடத்தியுள்ளனர். இதில் வலதுகை துண்டிக்கப்பட்டதுடன் தலையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனயைடுத்து காயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோஷ்டி மோதலில் வாள் வெட்டு வலது கையை இழந்த இளைஞர்
Reviewed by NEWMANNAR
on
June 17, 2013
Rating:

No comments:
Post a Comment