உயர்கல்வி அமைச்சின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்
நாடெங்கிலுமுள்ள பல்கலைகழகங்களைச்சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பல்கலைகழகங்களை அரசியல் மயப்படுத்துவதையும் இலவசக்கல்விக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதையும் கண்டிக்கும் வகையிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் சுமார் 15 ஆயிரம் வரையிலான மாணவர்கள் பங்கேங்கவிருக்கின்றனர்.
இன்று மேற்கொள்ளவிருக்கின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் சகல பல்கலைகழகங்களிலும் மாணவர் சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பல்கலைகழக மாணவர்கள் சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
மாணவர் பாதுகாப்பை கருதியும், மாணவர் எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்காமல் இருப்பது உறுதி செய்யப்படுமென இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லையென மாணவர் சங்கத்தலைவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மாணவர் சங்க தலைவர்களை அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகள் கிடைத்திருப்பதாக அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்தார்.
உயர்கல்வி அமைச்சின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2013
Rating:

No comments:
Post a Comment