தயா மாஸ்டர், தமிழினி, கே.பி விண்ணப்பம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் நிதிப்பொறுப்பாளரும் ஆயுத கொள்வனவாளருமான 'கே.பி' என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை மகளீர் பிரிவு முன்னாள் பொறுப்பாளரான 'தமிழினி' என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாமி மற்றும் 'தயா மாஸ்டர்' என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி ஆகியோர் வடமாகாண சபைக்கான தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் விண்ணப்பித்துள்ள போதிலும் கட்சி வேட்பாளர் நியமனக்குழு முன்னிலையில் இவர்கள் தோன்றவேண்டியிருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த மூவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்கள் எதுவும் இவர்களை குற்றங்காணவில்லை. எனவே, வடமாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக இவர்கள் செய்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் எடுக்காமல் விடுவதற்கான காரணமெதுவுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துக்கொண்டு ஒரு கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
.jpg)
தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி தமிழினி அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட இவர் 2013 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தயா மாஸ்டர், தமிழினி, கே.பி விண்ணப்பம்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment