மன்னார் ஆயருக்கு எதிரான பொதுபலசேனாவின் கருத்திற்கு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை கண்டனம்.
-அதில் மேலும் குறிப்பிடுகையில்,,,
நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட அநீதி இழைக்கப்பட்ட அனைத்து மக்களினதும் அரசியல் சமூக பொருளாதார மேம்பாடடிற்காகவும் மற்றும் மீள் குடியேற்றம் அடிப்படை வசதிகள் ஆகியவற்றினை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் நோக்கமாக செயற்பட்டு வரும் மேதகு ஆயர் அவர்களின் பணி மக்கள் மத்தியில் போற்றக்கூடிய ஒரு விடயமாகவும்.
ஒருசமூகத்தின் ஆன்மீக பொருளாதார விடுதலைக்காக தூய பணியாற்றிவரும் மேதகு ஆயர் அவர்கள் சாதி மத இன வேறுபாடு இன்றி ஆற்றி வரும் பணிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வாழ்வினை பெற்றுக்கொடுக்கும் தூய பணியில் முன்னின்று செயற்படுபவருமான மேதகு ஆயர் அவர்களை அரசியல் கட்சிகளோடு இணைத்து அடுத்த பிரபாகரன் என வர்ணித்து அனைத்து மக்களினதும் உள்ளங்களை நோகடிக்கும் இவ் அறிக்கைக்கு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையினர் எதிர்ப்பினையும் கண்டனத்தினையும் வெளியிடுவதாகவும் இனிவரும் காலங்களிலேனும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகையில் ஆழ்ந்து சிந்தித்து கருத்துக்களை வெளியிடுமாறும் ஆபாண்டமான பழிசுமத்தல்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுவதோடு தற்போது பொது பல சேன என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தனர்.
இப்போது கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் மற்றும் மக்கள் மீது வீண் பழி சுமத்துகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் இவ்வாறான தொருகண்மூடிதனமான செயற்பாடானது ஆன்மீகதலைவர்களை கொச்சைப்படுத்தும் செயல்கள் எனவும்; இனிவரும் காலங்களில் எந்த மதத் தலைவர்களாக இருந்தாலும் இவ்வாறான பழிசுமத்துகின்ற அபாண்டமான செய்திகளை வெளியிடுவதினை உடனடியாக தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் இவ்வாறான தொரு இழிவான செயற்பாட்டிற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் அதிமேதகு மல்கம் றஞ்ஜித் ஆண்டகை அவர்கள் தேரரின் இக் கூற்றுக்கு உடனடியான எதிர்ப்பினை வெளியிட்டு இவ்வாறான தொரு இழிவான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கான நடிவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையினர் சார்பாககேட்டுக் கொள்ளுகின்றோம்;.என குறிப்பிடப்பட்டள்ளது.
மன்னார் ஆயருக்கு எதிரான பொதுபலசேனாவின் கருத்திற்கு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவை கண்டனம்.
Reviewed by Admin
on
July 01, 2013
Rating:

No comments:
Post a Comment