வாக்காளர்களாக பதிவு செய்ய மீண்டும் வலியுறுத்துகிறது கபே
இதன்படி யாழ்ப்பாணத்தில், திருநெல்வேலி ஆடியபாதம் வீதியிலுள்ள அலுவலகத்தில் படிவங்களைப் பெறலாம். அத்துடன் அலுவலக இலக்கமான 021 222 9866 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறமுடியும் எனவும், முல்லைத்தீவில், வண்ணாங்குளம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் படிவங்களைப் பெறலாம். அத்துடன் அலுவலகத்தில் 077 6239437 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்எனவும் கபே அமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தம்மை வாக்காளராகப் பதிவு செய்யமுடியும். தேர்தல் திணைக்களத்தின் அனுமதியும் இந்த வேலைத்திட்டத்தை கபே அமைப்பு முன்னெடுத்து.
வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து பிறமாவட்டங்களிலும், பிறமாகாணங்களிலும் வசித்து வரும் மக்களில் இதுவரை தம்மை வாக்காளராகத் பதிவு செய்யாதிருப்பின் அவர்களை 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில்சேர்த்குக் கொள்வதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் இல. 100/19 ஏ வெலிகடவத்த வீதி ராஜகிரியவில் உள்ள கபே அமைப்பு அலுவலத்துடன் தொர்பு கொள்ள முடியும் என்றும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
வாக்காளர்களாக பதிவு செய்ய மீண்டும் வலியுறுத்துகிறது கபே
Reviewed by Admin
on
July 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment