அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்கள் தொழிற்துறை சார்ந்த கல்வியை கற்பதால் அவர்களுக்கு எதிர்கால உலகம் சந்தை வாய்ப்பினை வழங்கும்.

மாணவர்கள் எதிர்கால தொழிற்சந்தையை இலக்காக கொண்ட கல்வி முறைமையயைத் தெரிவு செய்து கற்பதன்மூலம் இலகுவாக தொழில் வாய்ப்பை பெற்று ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கமுடியும். அதற்கான ஏற்பாடுகளை அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரித்துள்ளார்.


நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 80 இலட்சம் ரூபா செலவிலான மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் க.பொ.த உயர்தரத்தில் தொழிநுட்பத்துறை பாட அங்குரார்ப்பண நிகழ்விலும் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்ட கல்வியைத்துறையை பொறுத்தவரை இன்று ஒரு மகத்தான நாள். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மகா வித்தியாலயத்திலும், கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் உயர்தர விஞ்ஞான தொழில்நுட்ப வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு தேசிய ரீதியிலே ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழான உதவிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரண்டு பாடசாலைகளுக்கு கிடைத்திருக்கின்றன. இதற்காக நாடளாவிய ரீதியில் 200 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஒவ்வொரு பாடசாலை என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கிளிநொச்சி ஒரு தேர்தல் தொகுதியாக இருக்கின்றபோதும் நாங்கள் இரண்டு பாடசாலைகளைத் தெரிவு செய்து வெற்றிகண்டுள்ளோம்.

தேசிய ரீதியாகப் பார்த்தால் 51 வீதமானவர்கள் கலைப் பாடத்தைத் தெரிவு செய்து படிக்கின்றார்கள். இனிவரும் காலங்களில் விஞ்ஞான, தொழில்நுட்ப பாடங்களில் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். கலைப்பிரிவின் வீதத்தை நாடளவிய ரீதியில் 20 வீதமாகக் குறைப்பதுதான் அரசின் நோக்கம். இவர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது என்பது கடுமையான பணி. அதனால்தான் இந்த தொழில்நுட்பத் துறைப் பாடத்திட்டத்தினை அரசு எதிர்கால தொழிற்துறையை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

எனவே மாணவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எதிர்கால உலகம் தொழிற்துறை சார்ந்த கல்விக்கே சந்தை வாய்ப்பினை வழங்கும். எனவே மாணவர்களும் அதனை நோக்காக கொண்ட கல்வி முறையினை தெரிவு செய்து கற்பது சாலப்பொருத்தமானது என்றார்.


மாணவர்கள் தொழிற்துறை சார்ந்த கல்வியை கற்பதால் அவர்களுக்கு எதிர்கால உலகம் சந்தை வாய்ப்பினை வழங்கும். Reviewed by Admin on July 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.