36 பதக்கங்கள் பெற்ற வடமாகாண மாணவர்கள்,அழகியற்பயிற்சிக்காக ஆசிரியர்கள் இந்தியாவிற்கு.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வடமாகாண மாணவர்கள் 36 பதக்கங்களைப் பெற்றது மிக மகிழ்ச்சியளிக்கின்றது. கற்றல் செயற்பாட்டுடன் இணைந்த கலை மற்றும் விளையாட்டுத்துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். வட மாகாணத்தில் 500க்கும் மேற்பட்ட அழகியல் பாட ஆசிரியர்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள் மூலம் வடமாகாணத்தில் கலைப்பாடங்களை வளர்க்கள நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இங்குள்ள அழகியற்பாட ஆசிரியர்களை இந்தியாவிற்கு அனுப்பி அங்கு அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
அத்துடன், 'தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் தினப்போட்டியில் வெற்றி 15 மாணவர்களை இந்தியவிற்கு அனுப்பி அங்கு அழகியற் கலை சம்மந்தமான பயிற்சிகளைப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு செல்லவுள்ள மாணவர்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவு செய்வதுடன் அடுத்த மாதம் நிறைவுக்குள் இந்திய செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்' என்று ஆளுநர் தெரிவித்தார்.
36 பதக்கங்கள் பெற்ற வடமாகாண மாணவர்கள்,அழகியற்பயிற்சிக்காக ஆசிரியர்கள் இந்தியாவிற்கு.
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:

No comments:
Post a Comment