அண்மைய செய்திகள்

recent
-

பிரபல வர்த்தக நிறுவனத்தில் சுவரை உடைத்து துணிகரக் கொள்ளை – வவுனியா நகரில் சம்பவம்

வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.


 செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்ற பொலிசார், சம்பவம் நடைபெற்ற கடைக்கு அடுத்த கடையில் பணியாற்றுபவர்களை விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.

 கொள்ளையிடப்பட்ட வர்த்தக நிறுவனம் வவுனியா நகரில் பழைமை வாய்ந்தது என்பதுடன், பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தின் பெறுமதி பல லட்சங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.



பிரபல வர்த்தக நிறுவனத்தில் சுவரை உடைத்து துணிகரக் கொள்ளை – வவுனியா நகரில் சம்பவம் Reviewed by Admin on July 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.