கறுப்பு யூலை
காலத்தால் "அழி"யாத
ஒரு "கறுப்பு"ப்புள்ளி.
1983 "ஆடி" மாதம்
"முடி"வதற்குள் ஆண்டு
முடிந்த கொடூரங்கள்.
இன "முரன்"பாடு
தோற்றுவித்த அழிவின்
"புதிய" பக்கங்கள்....
"கறுப்பு" யூலை
இன்னும் "குடி"த்துக்கொண்டிருக்கும்
"சிவப்பு" இரத்தம்..
இன"வெறி"
ஊட்டிய "விச"ப்பாலில்
மரணித்துப்போனது
"அமைதி"யும் சமாதானமும்.......
1983ன் ஆரம்பம்
2013 வரைதொடரும்
வாழ்வு "கிழிந்து"போன
"வலி"மிகுந்த அத்தியாயங்கள்.
என் "நாடு",என் "தேசம்"
என "பிரி"த்துச்சொல்ல வைத்த
கறைபடிந்த "கறுப்பு" யூலை......
*சந்துரு*
கறுப்பு யூலை
Reviewed by Admin
on
July 26, 2013
Rating:

No comments:
Post a Comment