கண்டி வைத்தியசாலை மூன்று கண் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டன
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
கண் சிகிச்சை பிரிவில் அமைந்துள்ள சில குளிரூட்டி கருவிகளிலிருந்து திடீரென இவ்வாறான வைரஸ் கிருமிகள் பரவியிருப்பதாகவும் அன்றைய தினம் இவ்வாறு கண் சிகிச்சைப் பிரிவுக்கு வந்திருந்த பலர் திடீரென வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகியதால் அங்கு பதற்ற நிலை காணப்பட்டது.
பின்னர் மூன்று பிரிவுகள் திடீரென மூடப்பட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் குளிரூட்டி கருவியிலிருந்தே இவ்வைரஸ் கிருமிகள் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
கண்டி வைத்தியசாலை மூன்று கண் சிகிச்சை பிரிவுகள் மூடப்பட்டன
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:
Reviewed by Admin
on
July 06, 2013
Rating:


No comments:
Post a Comment