ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் தந்தால் 200,000 டொலர் சன்மானம் -அவுஸ்திரேலிய பிரதமர்
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருபவர்களை பபுவா நியூகினியாவில் மீள்குடியமர்த்தும் தனது புதிய கடும் போக்குக் கொள்கையை வலுப்படுத்தும் அங்கமாகவே அவர் மேற்படி அறிவிப்பைச் செய்துள்ளார்.
சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் மீள் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை எனவும் அவரது புகலிடக்கோரிக்கை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் வறிய நாடான பபுவா நியூகினியாவிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் கெவின் ருத் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு வழிவகை செய்யக்கூடிய தகவலை வழங்குபவருக்கு 200,000 அவுஸ்திரேலிய டொலருக்கு (180,000 அமெரிக்க டொலருக்கு) அதிகமான சன்மானத்தை அவுஸ்திரேலிய பொலிஸ் வழங்கும் என அந்நாட்டு உள்நாட்டு விவகார அமைச்சர் ஜேஸன் கிளேயர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
அவர்கள் (ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள்) துன்பத்துக்கும் மரணத்துக்கும் வழி வகை செய்கிறார்கள் நாம் இந்த ஆட்கடத்தல் வர்த்தகத்தை மூட வேண்டியுள்ளது. அதனாலேயே அவர்களது தலைகளுக்கு சன்மானம் விதித்துள்ளோம் என கிளேயர் கூறினார்.
இந்த ஆண்டில் மட்டும் அவுஸ்திரேலியாவை 15,600க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் வந்தடைந்துள்ளனர்.
ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் தந்தால் 200,000 டொலர் சன்மானம் -அவுஸ்திரேலிய பிரதமர்
Reviewed by Admin
on
July 22, 2013
Rating:

No comments:
Post a Comment