அண்மைய செய்திகள்

recent
-

பரீட்சை தினத்துக்கு 05 நாட்களுக்கு முன் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளுக்கு தடை

க.பொ.த சாதாரண தரம் - உயர்தரம் - 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதியிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னரேயே தனியார் கல்வி நிலைய வகுப்புக்கள் - கருத்தரங்குகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பகிரங்கப் பரீட்சைகள் சட்டத்தின் 22வது பந்தியின் கீழ் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 இதன்படி மேற்படி மூன்று பரீட்சைகளும் ஆரம்பமாகும் தினத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்னிருந்து பரீட்சைகள் முடிவடையும் திகதிவரை தனியார் கல்வி நிலைய வகுப்புக்கள் - கருத்தரங்குகள் - மீட்டல் வகுப்புக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது.

 அதேபோன்று பரீட்சைகளுடன் தொடர்புடைய மாதிரி வினாத்தாள்கள் தயாரித்தல் - அச்சிடல் - பகிர்ந்தளித்தல் - போஸ்டர்கள் - பனர்கள் - துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் - மின்னஞ்சல்கள் அனுப்புதல் அல்லது இவற்றை அருகில் வைத்திருத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம். என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.



பரீட்சை தினத்துக்கு 05 நாட்களுக்கு முன் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளுக்கு தடை Reviewed by Admin on July 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.