அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலிய படகு விபத்து: கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் பலி (படங்கள்)

இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 5 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 மேற்கு ஜாவாவில் உள்ள சிடான் நகருக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் மாலை இந்தப் படகு கடலில் மூழ்கியது. அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால், பயணத்தை ஆரம்பித்த 9 மணி நேரத்தில் இந்தப் படகு கடலில் மூழ்கத் தொடங்கியது.

 இந்தப் படகில் பயணம் செய்த 204 பேரில், 189 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒரு 18 மாத ஆண் குழந்தை, 2 வயது, 7 வயதுடைய இரு பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் அடங்குகின்றனர்.

 மேலும், உயிரிழந்தவர்களில் இரு பெண்கள் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் இலங்கையர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், இலங்கை, ஈரான், ஈராக் நாடுகளைச் சேர்ந்த மேலும் ஆறு அகதிகள் காணாமற்போயுள்ளனர். படகு நீரில் மூழ்கத் தொடங்கியதும், சில அகதிகள் உயிர்காப்பு படகில் ஏறித்தப்பினர்.

பலர் கடலில் குதித்து நீந்திய போது, மீனவர்களாலும், இந்தோனேசிய பாதுகாப்பு துறையினராலும் காப்பாற்றப்பட்டனர். அதேவேளை இந்தப் படகில் பயணம் செய்த 44 பேர் காணாமற் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. மீட்கப்பட்ட ஒருவர் தகவல் வெளியிடுகையில், உயிர்தப்பிய அகதிகள் அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் தப்பியிருக்கலாம் என்பதால், காணாமற்போனவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

 உயிரிழந்த சிறுவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், ஈரான் பெண் ஒருவரும் மரணமானதாகவும், சாட்சிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் குடிவரவு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தப் படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.







அவுஸ்திரேலிய படகு விபத்து: கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் பலி (படங்கள்) Reviewed by Admin on July 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.