அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'ஜன செத தெரமுன' கட்சி இன்று வேட்பு மனுத்தாக்கல்.

வடமாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை காலை மன்னாரில் 'ஜன செத தெரமுன' என்ற கட்சி தனது வேட்பு மனுவை முதல் முதலாக தாக்கல் செய்துள்ளது.


குறித்த கட்சியின் தலைவர் பத்தர முல்ல சீல ரத்ன தேரர் குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக மன்னார் உதவித்தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்பு மனு மன்னார் தேர்தல் திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

8 வேட்பாளர்களைக் கொண்ட குறித்த வேட்பு மனுவில் மன்னார் முருங்கனைச் சேர்ந்த தமிழ்,முஸ்ஸிம் வேட்பாளர்கள் அதிகளவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னாரில் 'ஜன செத தெரமுன' கட்சி இன்று வேட்பு மனுத்தாக்கல். Reviewed by Admin on July 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.