ஏகலப் (ECLOF) ஸ்தாபனத்தின் அனுசரணையின் கீழ் 100 இற்கு மேற்பட்ட இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு வாழ்வாதார இலகு கடனுதவி வழங்கல் -படங்கள்
கடந்த ஐனவரி மாதத்திலிருந்து கொழும்பிலுள்ள எகலப் லங்கா ஸ்தாபனம் மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட விதவைகள், மாதர் சங்க பிரதிநிதிகள், சிறுகுழுக்களில் அங்கத்துவம் வகிக்கும் தாய்மார்களுக்கு அவர்களின் தேவையைப் பொறுத்து சுமார் ரூ.25,000.00 இலகு கடனை வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 100 இற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். மேலும் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடுக்குடா, பேசாலை, துள்ளுகுடியிருப்பு, போன்ற இடங்களில் உள்ள மாதர்கள் 100 பேரை தெரிவு செய்து 2ம் கட்டமாக அவர்களுக்கு ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து ரூ.25,000.00 இலகு கடன் வழங்கவுள்ளது.
இதில் முருங்கைக்காய் சேகரித்து விற்றல், பனங்கிழங்கு, ஒடியல், பனாட்டு விற்றல், பனைமட்டை, கிடுகு சிறுவியாபாரம், ஆடைகள் தைத்து விற்றல், கோழிப்பண்ணை, ஆடு வளர்ப்பு, வீட்டுத் தோட்டம், சிற்றுண்டி வியாபாரம், சிறியவலைகள் மூலம் மீன்பிடித்து விற்றல், குடிசைக் கைத்தொழில் போன்றவற்றிக்கு உதவிகள் நாடப்பட்டுள்ளது.
பயனாளிகள் ஒரு வருடத்தில் இக்கடனை செலுத்துவதுடன், தமது வாழ்வாதாரத்தை சிறிது உயர்த்திய பின்னர், அடுத்துவரும் ஆண்டு ரூ.40,000.00 வரை தேவைக்கேற்ப கடனுதவி அதிகரித்து வழங்கப்படும். எமது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய மன்னார் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாதர்சங்க உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், போன்றவர்களுக்கு எகலப் பணிப்பாளர் சபையினர் நன்றி கூறுகின்றனர்.
Mr. Sinclair Peter ,
Consultant
to ECLOF in Mannar
M.No +094 – (0) 77-2131-652
E.mail ; petsinclair@gmail.com
ஏகலப் (ECLOF) ஸ்தாபனத்தின் அனுசரணையின் கீழ் 100 இற்கு மேற்பட்ட இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு வாழ்வாதார இலகு கடனுதவி வழங்கல் -படங்கள்
Reviewed by Admin
on
July 22, 2013
Rating:
No comments:
Post a Comment