இலங்கை நிராகரித்த எரிபொருள் தரமானது - இனோக்
சிங்கப்பூரில் நடத்தப்பட்ட சுயாதீன ஆய்வுகளில் எரிபொருளானது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிய தரத்தினை கொண்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதுதொடர்பான அறிக்கை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைத்துள்ள இனோக் நிறுவனம் இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மீளாய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
உரிய தரத்தை கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்து நிராகரிக்கப்பட்ட எரிபொருளுக்குப் பதிலாக வேறு எரிபொருளை வழங்குவதாக முன்வைத்த யோசனை கூட்டுத்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இனோக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தொடர்பில் இணைந்து ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை நிராகரித்த எரிபொருள் தரமானது - இனோக்
Reviewed by Admin
on
July 22, 2013
Rating:
No comments:
Post a Comment