புகையிரதத்தில் மோதி இளம் பெண் மரணம்: மட்டு ஐயன்கேணியில் சம்பவம்
கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஐயங்கேணிப் பகுதியில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஐயன்கேணி ரகுநாதன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய ராசலிங்கம் காயத்திரி என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
குறித்த இளம்பெண் அவ்வப்போது மனநிலை பாதிப்பிற்குள்ளாகுபவர் என்றும் ஏற்கெனவேயும் ஒரு தடவை இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு காயங்களுடன் உயிர் தப்பியவர் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிரதத்தில் மோதி இளம் பெண் மரணம்: மட்டு ஐயன்கேணியில் சம்பவம்
Reviewed by Admin
on
July 17, 2013
Rating:

No comments:
Post a Comment