மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராம மக்களின் அவல நிலையை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை (படங்கள் ).
மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் அ.சுனேஸ்.சோசை தலைமையில் குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில் குறிப்பிடுகையில்,,,,
ஜோசப்வாஸ் நகர் மக்களாகிய நாங்கள் 1999-06-29 ஆண்டு யுத்தத்தின் காரணமாக எமது உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் விடத்தல் தீவிலிருந்து இடம் பெயர்ந்து கடல் மார்க்கமாக பள்ளிமுனை கிராமத்தின் கடற்பகுதியினை வந்தடைந்தோம். வந்தடைந்த நாள் முதல் எங்கள் எல்லோரையும் மாவட்டசெயலகத்தினுடாக பேசாலை நலன்புரி நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு 2 வருடங்களாக அங்கு அகதி வாழ்கை வாழ்ந்து வந்ததை நீங்கள் அனைவரும் அறிந்த உண்மையே.
அச் சமயத்தில் 2001ம் ஆண்டு மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் அண்டகை அவர்கள் எங்களை நேரில் வந்து சந்தித்து எமது பிரச்சினைகளை கேட்டறிந்தகொண்டார்.
அன்று தொடக்கம் எங்கன் மக்களின் மீள் குடியேற்றத்திற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தோட்டவெளிகிராமத்திற்கு அண்மையில் காட்டுப்பகுதியாககாணப்பட்ட இடத்தினை துப்பரவு செய்து தரப்பட்டு மக்களாகிய நாம் தற்காலிகமாக குடியமார்த்தப்பட்டோம்.
அப்போது எமது நிலையினை அறிந்து கொண்ட ஆர்.டி.எப். நிறுவனம் எம்மை வந்து சந்தித்து மக்களின் அடிப்படைபிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டு சென்று மக்களாகிய நாங்கள் தற்காலிகமாக குடியமர்வதற்கான தற்காலிக கொட்டகையினை அமைப்பதற்கு கம்பிசெற் 04பை சீமேந்து மற்றும் 300 கிடுகுகள் என்பன வழங்கி எமது துயரத்தினை போக்கினார்கள் .
அவர்களுக்கு எமது சமூகம் இன்றும் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம். இது மட்டுமன்றி அன்றில் இருந்து அரசாங்கத்தினால் உணவு முத்திரையும் கூறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வழங்கப்பட்டது. பின்னர் உணவு முத்திரையினை மீள் ஒப்படைக்குமாறு பணிப்புரை விடப்பட்டதற்கு இணங்க மக்களாகிய நாங்கள் உணவு முத்திரையினை ஒப்படைத்தோம்.
ஒப்படைக்கும் வேளையில் மக்களாகிய எங்களுக்கு அங்கு வரப்பட்ட அரச உத்தியோகஸ்தர்களினால் கூறப்பட்டது உணவுமுத்திரையினை நிறுத்தி உங்களுக்கு 25000 ரூபாவும் வீட்டுத்திட்டமும் தருவதாக கூறப்பட்டது.
அன்று மக்களாகிய எமக்கு இருந்த சந்தோசம் மிகப் பெரியதாக காணப்பட்டது. ஆனால் எமக்கு கிடைத்தது 25000 ரூபாமட்டுமே அன்றில் இருந்து இன்று வரைக்கும் மக்களாகிய நாம் ஒலை குடிசையில் தான் வாழ்ந்து வருகின்றோம்.
ஆனாலும் 07 வருடங்கள் கழிந்த நிலையில் கூட அரசாங்கத்தினாலோ பிரதேசசபையினாலோ மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த வொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவும் இல்லை. அப்படி மேற்கொள்ளுவதற்கான திட்டம் தீட்டிருந்தால் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவும் இல்லை என்பது வெந்த புண்ணில் வேல் பாச்சும் செயலாக காணப்படுகின்றது.
வருடா வருடம் மழைக்குள்ளும் வெள்ளத்திற்குள்ளும் வாழ்ந்து வருகின்றோம் .
ஒலையால் வேயப்பட்டுள்ள எமது வீடுகள் தற்போது காற்றடிகாலத்தினால் தூக்கி எறியப்படும் நிலை காணப்படுகின்றது. இதனால் எமது கிராமத்தில் காணப்படும் ஒட்டு மொத்த குடும்பங்களும் பாதிப்படையும் நிலை காணப்படுகின்றது.
எமது கிராமத்தில் 50 மேற்பட்ட பெண்களை தலமை தாங்கும் பெண்மணிகள் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கு மாவட்டசெயலகத்தினாலோ அல்லது பிரதேசசெயலகத்தினாலோ அல்லது பிரதேச சபையினாலோயோ என்ன செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தி இவ்வாறான பெண்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தீர்கள் இல்லாவிட்டால் எத்தனை தடவைகள் எமது மக்களின் பிரச்சினைகளை வந்து நேரில் கலந்துரையாடி திட்டங்களை வகுத்துள்ளீர்கள்
எல்லாவற்றையும் பார்க்கும் போது தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டுபொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி செயற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையினை மறந்து மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியானதொரு திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அணையாததீபங்கள் பெண்கள் தலமைத்துவ அமைப்பு ஜோசப்வாஸ் நகர் - தோட்டவெளி மக்கள் பிரதிநிதிகள் ஊடாக கேட்டு நிற்கின்றோம்.
தற்போது யுத்தம் முடிவுற்ற நிலையில் இடம் பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்தியன் வீட்டுதித்திட்டத்தில் எமது கிராமம் 420 குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதன் காரணத்தினை அரசாங்க தினைக்கள அதிகாரிகள் மக்களுக்கு சரியான முறையில் தெளிவுப்படத்தவும் இல்லை இதை பற்றி கதைத்ததும் இல்லை.
ஆனால் மக்களாகிய நாம் கிராம அதிகாரியிடம் கேட்டுள்ளோம் அவரோ இதை பற்றி எழுதி ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என மக்களாகிய எங்களுக்கு சுருக்கமான விதத்தில் பதிலினை அளித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்கத்தக்கதாக மக்களாகிய நாம் கேட்கின்றோம் பிரதேச சபையிடம் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு இந்தியன் வீட்டுத்திட்டம் கிடைக்குமா? இதற்கான தீர்வினை மன்னார் பிரதேச செயலாளர் ஊடாக பெற்றுத்தருவீர்களா? எது எப்படி இருப்பினும் எமது கிராமத்தில் சில குடும்பங்கள் மீன் பிடி தொழிலினை நம்பியும் சிலர் அன்றாடம் கூலிதொழில் செய்து கொண்டு தான் தங்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துக் கொண்டு வருகின்றோம்.
இருந்தும் மீனவ தொழில் செய்வதற்கான நிரந்தரமான தொரு துறைமுகம் எமக்கு கொடுக்கப்பட வில்லை.
அதிகாரிகளே சற்று சிந்தியுங்கள் நாம் கண்ணாடி பெட்டிக்குள் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என்பது ஓடும் தண்ணீரில் எழுதும் செயலாக காணப்படாமல் கிராமத்திற்குள் சென்று மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி மக்களின் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும் என கேட்டு நிற்கின்றோம்.
கௌரவபிரதேச சபை தவிசாளர் அவர்களே!
மக்களாகியநாம் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கானதீர்வு என்ன?
• இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும்.
• மலசலக்கூடம் இல்லாதவர்களுக்கு மலசலகூடம் அமைத்தக் கொடுக்கப்பட வேண்டும்
• கிராமத்தினுள் வீதிவிளக்குகள் பொருத்தப்படல் வேண்டும்.
• மின்சாரம் இல்லாதவர்களுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
• பெண்கள் தலமைவகிக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிதிட்டங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தவிசாளர் அவர்களே!
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எமக்கு பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைக்கான தீர்வினை அது நல்லதோ கெட்டதோ உங்களது பிரதேசசபையினுடாக எழுத்து மூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் (1மாதம்) தந்துதவும் படிஅணையாததீபங்கள் பெண்கள் தலமைத்துவ அமைப்பு ஜோசப்வாஸ் நகர் - தோட்ட வெளிமக்கள் பிரதிநிதிகள் ஊடாக கேட்டுநிற்கின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராம மக்களின் அவல நிலையை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை (படங்கள் ).
Reviewed by Admin
on
July 25, 2013
Rating:
No comments:
Post a Comment