அண்மைய செய்திகள்

recent
-

ஆலய வழிபாட்டுக்குச் சென்ற 1500 மக்களை திருப்பி அனுப்பியது இராணுவம்!

மயிலிட்டியிலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட சென்ற மக்களை இராணுவத்தினர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மயிலிட்டியில் உள்ள முருகன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகி அம்மன் ஆலயம் என்பவற்றுக்கு தரிசனத்திற்காக இன்று காலை சென்ற மக்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.


 குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலய வழிபாடொன்றிற்கு செல்ல அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் மயிலிட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

 இவ் அறிவித்தலை தொடர்ந்து 20 பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களில் 1500 இற்கும் மேற்பட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக மயிலிட்டிக்கு சென்றுள்ளனர். இவ்வாறு வழிபாடுகளுக்கு சென்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மயிலிட்டி முருகன் ஆலய தர்மகரத்தா வடிவேல்கரசன் தெரிவித்துள்ளார்.





ஆலய வழிபாட்டுக்குச் சென்ற 1500 மக்களை திருப்பி அனுப்பியது இராணுவம்! Reviewed by Admin on July 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.