அண்மைய செய்திகள்

recent
-

யாழ் மாணவர்களின் போதைப் பாக்கு பாவனை தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம்

யாழ்.நகர்ப் பாடசாலைகளில் போதையூட்டிய பாக்கு பயன்படுத்தும் மாணவர்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் சிறுவர் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



 யாழ்.புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் 9 ஆம் தரத்தை சேர்ந்த 10 மாணவர்கள் போதையூட்டிய பாக்கைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டு பாடசாலை அதிபரால் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.

 இதனை அடுத்து இதுபோன்று யாழ்.நகரிலுள்ள வேறு சில பாடசாலைகளிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் இவ்வாறு போதையூட்டிய பாக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறுவர் நீதிமன்றினால் வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


யாழ் மாணவர்களின் போதைப் பாக்கு பாவனை தொடர்பில் அறிக்கை கோரும் நீதிமன்றம் Reviewed by Admin on July 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.