அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதிக்கும் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருக்களுக்கும் இடையே இடம் பெற்ற சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு.(Photo&Video)

மன்னார் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக வந்து மக்களை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால் அனுப்பி வைக்கப்பட்ட மன்னார் மறைமாவட்ட அருட்பணியாளர்களை கொண்ட குழுவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உறுதியளித்துள்ளதாக மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்  குறித்த குழுவினர் தெவித்தனர்.

மன்னார் மாவட்ட குருக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கும் இடையில் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் ஆயர் இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது.

இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற 6 அருட்தந்தையர்களில் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை,அருட்தந்தை றெஜினோல்ட் பிரான்சிஸ்,அருட்தந்தை அருள் ராஜ் குரூஸ்,அருட்தந்தை இ.செபமாலை ஆகிய நான்கு அருட்தந்தையர்களும் கலந்து கொண்டு கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து தாம் உரையாடிய விடையங்களை தெழிவு படுத்தினர்.

-இச்சந்திப்பு தொடர்பாக அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,,,

கடந்த 18 ஆம் திகதி மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பாக மறுநாள் 19 ஆம் திகதி அரச,தனியார் ஊடகங்களில் செய்தி வெளியாகியது.ஒவ்வொரு ஊடகங்களும் குறித்த செய்தியை திரிவு படுத்தி வெளியிட்டிருந்தது.

-இவற்றை அறிந்தோர் இச்செய்திகளினால் பல்வேறு விதமான எண்ணங்களையும்,மனோபாவங்களையும் கொண்டிருக்கின்றனர்.இதனால் இச்சந்திப்பு தொடர்பாக நாம் செய்தி ஒன்றை வெளியிட தீர்மானித்தோம்.

-மன்னார் ஆயர் ஆயர் அவர்கள் மன்னார் மாவட்ட மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி ஜனாதிபதி அவர்களுக்கும்,ஏனைய அமைச்சர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக எழுதிய கடிதங்கள் தனித்து அவருடைய எண்ணங்கள் மட்டுமல்ல அவை பெரும்பான்மையான குருக்களினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் கருத்து என்பதை ஆணித்தரமாக ஜனாதிபதி அவர்களுக்கும்,ஏனை சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கமளிப்பதற்காகவே இந்த சந்திப்பு மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் பணிப்பின் பெயரில் நடந்தேறியது.

-இக்குழுவில் ஆறு மன்னார் மாவட்ட குருக்கள் பங்குபற்றினர்.

அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை,அருட்தந்தை டெஸ்மன் குலாஸ், அருட்தந்தை றெஜினோல்ட் பிரான்சிஸ்,அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் ,அருட்தந்தை அருள் ராஜ் குரூஸ்,அருட்தந்தை இ.செபமாலை ஆகியோர் அமைச்சர் ஒருவரினால் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துச் அசெல்லப்பட்டனர்.

-இந்த சந்திப்பின் போது அமைச்சர்களான இ.எல்.பீரிஸ்,நிமால் சிறிபாலடி சில்வா,பசில் ராஜபக்ஸ,சுசில் பிரேம ஜெயந்த,மைத்திரி பால சிறிசேன,டலஸ் அலகப்பெரும,சரத்குமார குனரட்ன,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியொருடன் மன்னார் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களும் பிரசன்னமபகியிருந்தனர்.
-இந்த சந்திப்பின் போது உரையாடப்பட்டவை.இந்த சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கியதிற்கும்,மடு தேவாலயத்திற்கு அரசினால் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் செய்து கொடுக்கப்பட்ட,படுகின்ற வசதிகளுக்காக குருக்களின் பிரதி நிதியால் நன்றி கூறப்பட்டது.

-மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்கள் ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை ஒரே ஒரு அமைச்சரை கொண்டதாக என்ன தடைப்பட்டுள்ளனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.ஏனெனில் பல அமைச்சுக்கள் இருந்தாலும் அவை அனைத்தின் பணிகளையும் மன்னார் மாவட்டத்தின் ஒரே ஒரு அமைச்சர் செய்வதை போன்ற தோற்றப்பாடு நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டது.

-மன்னார் மாவட்டத்தின் அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் தொழில்வாய்ப்புக்களில் அரசின் கொள்கைகளுக்கு விரோதமாக ஒரு இனத்திற்கு மட்டுமே முன்னுரிமையும்,விகிதாசார முறைக்கு மேலாக வாய்ப்புக்களும் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

-பிற மாவட்டங்களில் உள்ள மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு அழைத்துவரப்பட்டு வதிவிடமும்,வாழ்வாதார தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் அதே வேளையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் வதிவிடமும்,தொழில் வாய்ப்புக்களும் இன்றி அவஸ்தைப்படுவது கூறப்பட்டது.

-அரச வேலைவாய்ப்புக்களில் நேர்முகத்தேர்வுகளின் போது அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகள் நிராகரிக்கப்பட்டு கல்வி தகமைகள் மிக்குறைந்த பொருத்தமற்ற நபர்கள் தெரிவு செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

-முள்ளிக்குள பாரம்பறிய புராதான கத்தோழிக்க கிராம மக்களின் பெரும்பான்மையான காணி அரச சேவைக்காக சுவிகரிக்கப்பட்டதின் பின் மக்களின் இன்னல் போக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திட்டத்தில் அதாவது பிரிதொரு இடத்தில் காணி வழங்குதல்,கடற்படையினரினால் சுவீகரிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் நிர்மாணித்துக்கொடுத்தல்,தொழில் வசதிக்கான உபகரணங்கள் அதாவது வள்ளம்,மோட்டார் இயந்திரம் வழங்குதல் ஆகியவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதில் கடற்படையினர் பொறுப்பேற்ற 27 வீடுகள் நிர்மாணம் செய்து நிறைவடைந்து விட்டதாகவும்,அரச அதிபரினதும் பிரதேச செயலாளரினதும் செயல் திட்டங்கள் மிக குறைவாகவே நடைபெறுவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டது.இது பற்றி நடைபெறும் மீளாய்வுகளில் முக்கிய அதிகாரிகள் பங்குபற்றுவதை தவிர்ப்பதாகவும்,இவ்விடையத்தில் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

-தலைமன்னார் பியர் கிராமத்தில் யுத்தத்திக்கு முன்பு இருந்து நீண்ட காலமாக வசித்து வரும் மக்களின் வதிவிடங்களும்,ஆலையத்திற்குசொந்தமான காணியும்,அக்கிராமத்திற்கு உரிய சேமக்காலை அமைந்திருக்கும் காணியும் ,கடற்படையினரின் முகாமின் விஸ்தரிப்புக்காண சுவீகரிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது. கடற்படையினரின் முகாமிற்கு மறுமக்கமாகவிருக்கும் எஸ்.ஆர்.சி காணி பல ஏக்கர்கள் இருந்தும் அவை தனியோரு அமைச்சரின் தேவைக்காக ஒதுக்கப்பட்டமையினால் தான் கடற்படையினர் இவ்வாறு மக்கள் வாழும் பகுதியை முகாம் விஸ்தரிப்பிற்காக வேண்டி நிற்பதும் விளக்கப்பட்டது.

-இக்குழுவின் முறைப்பாடுகளை மிகவும் கரிசனையோடு செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள் அங்கு பிரசன்னமாக இருந்த அமைச்சர்களையும்,ஏனைய அமைச்சர்களையும் எதிர் வரும் காலத்தில் மன்னார் மக்களை சந்தித்து அவர்களின் குறை கோட்டு தத்தம் அமைச்சிகளுக்கூறிய பணியை நிறைவேற்றி மக்களின் குறையை நீக்கும் படி கேட்டுக்கொண்டார்.

-அமைச்சர் ஒருவரின் தலையீட்டினால் நடைபெறுவதாக கூறப்பட்ட குழப்பங்களுக்கு நிவர்த்தி காணும் பொருட்டு அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த அவர்களை 23 ஆம் திகதி மன்னாருக்கு விஜயம் மேற்றகொள்ள ஜனாதிபதி பணித்தார்.

-இலங்கையில் ஜனாதிபதியை தவிர எந்தவொரு அமைச்சரும் அரச காணிகளில் அதிகாரமற்றவர்கள் என்று விளங்கப்படுத்தி தலைமன்னார் காணி சுவீகரிப்பு பற்றிய குருக்களின் முறைப்பாட்டை விசாரிப்பதாகவும் உறுதி கூறினார்கள்.

-குருக்களின் வேண்டு கோளை ஏற்று மிக விரையில் மன்னார் மாவட்ட மக்களை தானே நேரடியாக சந்தித்து குறைகளை நிறைவேற்றப்போவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.









 -மன்னார் நிருபர்-

(22-07-2013)
ஜனாதிபதிக்கும் மன்னார் மாவட்ட கத்தோலிக்க குருக்களுக்கும் இடையே இடம் பெற்ற சந்திப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு.(Photo&Video) Reviewed by NEWMANNAR on July 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.