இலங்கையில் அதிகரித்து செல்லும் பெண்கள் மீதான வன்முறை!
அதன்படி குறித்த ஆய்வின் மூலம் கடந்த இரண்டு வருடங்களில் 80 வீதத்தால் குடும்ப வன்முறைகள் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை உலகில் 90 நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறை காரணமாக பாதிக்கப்படுகின்றார் என பெண்கள் உரிமைகள் தொடர்பாக அழுத்தங்களை ஏற்படுத்தும் குழு குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் உரிமைகள் குழுவின் உப தலைவர் சரோஜா சவித்ரி போல்ராஜ் தெரிவிக்கையில் தற்போது அதிகரித்துள்ள மதுபானசாலைகள் வன்முறைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்டவை. சந்திக்குச் சந்தி காணப்படும் மதுபானசாலைகள் வன்முறைகள் அதிகரிக்க காரணமாகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிஸ் நிலையங்களில் முறையிட முன்வராமை அத்துடன் கிராமப் புறங்களில் வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வின்மை ஆகியவை சிறீலங்காவில் வன்முறைகள் அதிகரிக்க் காரணமாகின்றன.
மேலும் பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவோருக்கு எதிராக இழப்பீடு வழங்குதல் அல்லது குறைந்த கால சிறைத் தண்டனையே. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் பெண்கள் மீதான வன்முறை!
Reviewed by Admin
on
July 22, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment