முருங்கன் பிரதேசவைத்தியசாலையில் கடந்தவாரம்நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு (படங்கள்)
1.முருங்கன் பிரதேசவைத்தியசாலையில் டெங்கு ஓழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட வைத்திய அதிகாரி Dr.Osman Charles மற்றும் வைத்திய அதிகாரிகளினால் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டு உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் டெங்கு ஓழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.
2.முருங்கன் பிரதான வாய்க்கால்கள் அமைப்பின் அனுசரணையுடன் கட்டப்படவிருக்கின்ற சிற்றூண்டிச்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்டவைத்திய அதிகாரி அவர்களினால் 05.06.2013 அன்று நாட்டப்பட்டது. இவ் நிகழ்வில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
3.பாலூட்டும் தாய்மார்களுக்கான 'தாய்ப்பாலூட்டும் அறை'யானது மாவட்ட வைத்திய அதிகாரி தலைமையில் 09.07.2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி மதகுருக்கள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட வைத்திய அதிகாரி
பிரதேச வைத்தியசாலை
முருங்கன்
முருங்கன் பிரதேசவைத்தியசாலையில் கடந்தவாரம்நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு (படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
July 13, 2013
Rating:

No comments:
Post a Comment