முஸ்லிம்கள் எனது நண்பர்கள், ஆனால் மைதானத்தில் புத்தர்சிலையினை வைப்பதற்கு யாரிடமும் கேட்கவேண்டியதில்லை: அபயவன்ஸ அலங்கார தேரர்
என்னிடம் மத வேறுபாடுகளோ சதி வோறுபாடுகளோ ஒரு போதும் கிடையாது. முஸ்லிம்கள் எப்போதும் எனது நண்பர்கள். சிலையை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன் என வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி வண.நாவானே அபயவன்ஸ அலங்கார தேரர் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மைதானத்தில் திங்கட்கிழமை திடீரென தோன்றிய புத்தர் சிலை தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்!
புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியில் சிலை வைப்பதற்கு நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி வி.ஜேமிஸ் அபுகாமி என்பவரால் புத்த ஜயந்தி விகாரைக்கு இரண்டு ஏக்கரும், பதினேழு பேர்ச் அடங்கலான காணியை அன்பளிப்புச் செய்திருந்தார்.
கடந்த யுத்த காலத்தின் போது விகாரையின் காணிகளை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் சிலரால் விகாரையின் காணிகள் பிடிக்கப்பட்டு தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படும் காணி அடங்களாக இரண்டு ஏக்கருக்கும் குறைவாக காணியே உள்ளது.
இந்த காணி விவகாரம் தொடர்பாக வாழைச்சேனை நீதிமன்றில் வழங்கு நடைபெற்ற போது தனக்கு தமிழ் தெரியாது என்றும், இந்த வழக்குத் தொடர்பாக தமிழில் எந்தவிதமான அறிவித்தல்களும் வழங்காமல் சிங்களத்தில் மொழி பெயர்த்து அனுப்புமாறும் எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் என்ன நடைபெற்றுள்ளது என்று எனக்கு எதுவும் தெரியாது.
தீர்ப்புக் கிடைத்து விட்டது என்று பாடசாலை நிருவாகமோ வேறு எவருமோ என்னிடம் கூறவில்லை. இந்த புத்தர் சிலையை நான் தான் வைத்தேன். இது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாடாக எவரும் கருதக் கூடாது. புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணியை மீட்கும் போராட்டமே என்றார்.
இது தொடர்பாக பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய அபிவிருத்திக் குழு செயலாளர் எஸ்.எம்.செயினுதீனை தொடர்பு கொண்ட வினவிய போது!
இந்த மைதானக் காணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக் அமைவாக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு அமைய நீதிமன்றத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக விகாரையின் நிர்வாகம் அத்துமீறி அக்காணியில் புத்தர் சிலை வைத்துள்ளது.
பாடசாலை நிருவாகத்தை சிவில் வழங்கு தாக்கல் செய்யும் படி கூறியதற்கிணங்க சட்டத்தரணிகளுடன் சிவில் வழங்கு தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றோம் என்றார்.
முஸ்லிம்கள் எனது நண்பர்கள், ஆனால் மைதானத்தில் புத்தர்சிலையினை வைப்பதற்கு யாரிடமும் கேட்கவேண்டியதில்லை: அபயவன்ஸ அலங்கார தேரர்
Reviewed by NEWMANNAR
on
July 03, 2013
Rating:

No comments:
Post a Comment