வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் கட்சிகளே முடிவெடுக்கவேண்டும்: சுரேஸ் MP
வடக்கு மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.கிளை தீர்மானித்துள்ளமை ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையாது எனத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபைக்கான முதலமைச்சர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைக்கான கூட்டமைப்பினுடைய வேட்பாளர்களை கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளே தெரிவு செய்யவேண்டும். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தனது சார்பாக ஒருவரை தெரிவு செய்வது என்பது, ஒரு கட்சி சார்ந்த முடிவாகவே அமையும். கூட்டமைப்பினுடைய வேட்பாளராக இருக்க வேண்டுமானால் அதன் இணைக்கப்பாடுடன் வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டும்.
தமிழரசுக் கட்சியினுடைய யாழ்.கிளை தமிழரசுக் கட்சியினுடைய முதலமைச்சர் வேட்பாளராக மாவை சோனாதிராஜாவை பிரேரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். அதனை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு அறிவித்துள்ளார்கள். ஆனால் சம்பந்தன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில், அப்படியான எதுவும் நடைபெறவில்லையென தெரிவித்ததுடன் மட்டுமல்லாது தேர்தலுக்கான திகதி அறிவித்த பின்னரே இது தொடர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Video
Video
வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் கட்சிகளே முடிவெடுக்கவேண்டும்: சுரேஸ் MP
Reviewed by NEWMANNAR
on
July 03, 2013
Rating:

No comments:
Post a Comment